\
விஜயகுமார் வீட்டில் இருந்து வனிதா வெளியேற்றம் !

விஜயகுமார் வீட்டில் இருந்து வனிதா வெளியேற்றம் !

விஜயகுமார் வீட்டில் இருந்து வனிதா வெளியேற்றம் !
Published on

நடிகர் விஜயகுமாருக்கு சொந்தமான ஆலப்பாக்கம் வீட்டில் இருந்து அவரது மகளும் நடிகையுமான வனிதா இன்று காலை வெளியேற்றப் பட்டார்..

நடிகர் விஜயகுமாருக்கு மதுரவாயலை அடுத்த ஆலப்பாக்கத்தில் பங்களா ஒன்று உள்ளது.  ஏராளமான அறைகளை கொண்ட இந்த பங்களா சினிமா படப்பிடிப்புக்காக வாடகைக்கு விடப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் இந்த வீட்டை விஜயகுமார், தனது மகள் வனிதா வுக்கு படப்பிடிப்புக்காக கொடுத்துள்ளார். படப்பிடிப்பு முடிவடைந்தும் வனிதா,  வீட்டை காலி செய்யாமல் இருந்து வந்தாராம்.

இதுபற்றி விஜயகுமார் கேட்டபோது, ’இந்த வீட்டில் எனக்கும் பங்கு இருக்கிறது. இதை காலி செய்ய முடியாது’ என்று கூறினாராம். இதையடுத் து இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. விஜயகுமார் மதுரவாயல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வனிதாவிடம் விசாரணை நடத்தினர். அவர்களிடமும், இந்த வீட்டில் தனக்கு பங்கு உள்ளது என்று வனிதா கூறினார். அங்கு கூடிய பத்திரிகையாளர்களிடம் வனிதா தகராறு செய்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர், போலீசார் வீட்டில் இருந்து வனிதாவை இன்று காலை வெளியேற்றினார்.  வீட்டில் இருந்த அவர் நண்பர்கள் ஏழு பேரை போலீசார் கைது செய்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com