\
பரத்துடன் இணைந்த வாணி போஜன்: புதிய படத்தின் அறிவிப்பு

பரத்துடன் இணைந்த வாணி போஜன்: புதிய படத்தின் அறிவிப்பு

பரத்துடன் இணைந்த வாணி போஜன்: புதிய படத்தின் அறிவிப்பு
Published on: 

பரத்- வாணி போஜன் இணையும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. 

நடிகர் பரத் நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான ’காளிதாஸ்’ பாராட்டுக்களையும் வசூலையும் குவித்தது. அதனைத்தொடர்ந்து, பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கானுக்கு வில்லனாக ‘ராதே’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் ரம்ஜானையொட்டி அடுத்தமாதம் வெளியாகிறது. இந்நிலையில், பரத்தின் அடுத்தப்பட அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அறிமுக இயக்குநர் சக்திவேல் இயக்குகிறார்.

சசிக்குமாரின் ‘பகைவனுக்கு அருள்வாய்’, விக்ரமுடன் ‘விக்ரம் 60’, விக்ரம் பிரபுவுடன் ‘பாயும் ஒளி நீ எனக்கு’, வைபவ்வுடன் பெயரிடாதப்படம் என பல்வேறு படங்களில் நடித்து வரும் வாணி போஜன், இப்படத்தில் பரத்துக்கு ஜோடியாக இணைந்திருக்கிறார். இப்படத்தை வாணி போஜன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த ‘ஓ மை கடவுளே’ படத்தை தயாரித்த டில்லி பாபு தயாரிக்கிறார்.

இயக்குநர் சக்திவேல் சமீபத்தில் இயக்கிய ‘அபிமன்யூ’ குறும்படம் கவனம் ஈர்க்கவே, இந்த பட வாய்ப்பு அவருக்கு கிடைத்திருக்கிறது. கே.எஸ் ரவிக்குமார் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் இப்படம் சஸ்பென்ஸ் த்ரில்லர் என்று சொல்லப்படுகிறது. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தென்காசி, அம்பாசமுத்திரம் பகுதிகளில் தொடங்கவுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com