\
'வஞ்சம் தீர்த்தாயடா' - இயக்குநர் சுசி கணேசனின் புதிய படம்

'வஞ்சம் தீர்த்தாயடா' - இயக்குநர் சுசி கணேசனின் புதிய படம்

'வஞ்சம் தீர்த்தாயடா' - இயக்குநர் சுசி கணேசனின் புதிய படம்
Published on

'திருட்டுப்பயலே' படத்தின் இயக்குநர் சுசி கணேசன் 'வஞ்சம் தீர்த்தாயடா' என்ற புதிய படத்தை இயக்க உள்ளார்.

மணிரத்னம் தயாரிப்பில் வெளியான 5 ஸ்டார், பிரசாந்த் நடிப்பில் வெளியான விரும்புகிறேன், ஜீவன் நடித்த திருட்டுபயலே உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சுசி கணேசன். இவர் இறுதியாக திருட்டுப்பயலே-2 என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இதற்கு பிறகு அடுத்த படத்திற்கான கதையை எழுதி வந்த அவர், தற்போது படப்பிடிப்புக்கு தயாராகி, 'வஞ்சம் தீர்த்தாயடா' என்ற தலைப்பையும் அறிவித்திருக்கிறார்.

இந்த படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அதேபோல் படத்திற்கு ஒரு முன்னணி இசையமைப்பாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் சுசி கணேசன். படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பை பொங்கல் பண்டிகைக்கு வெளியிட திட்டமிட்டு இருக்கின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com