அஜித் சார் கரியரில் ’வலிமை’ மறக்க முடியாத படமாக இருக்கும்”: கார்த்திகேயா

அஜித் சார் கரியரில் ’வலிமை’ மறக்க முடியாத படமாக இருக்கும்”: கார்த்திகேயா
அஜித் சார் கரியரில் ’வலிமை’ மறக்க முடியாத படமாக இருக்கும்”: கார்த்திகேயா

” ’வலிமை’ படம் அஜித் சார் சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத படமாக இருக்கும்” என்று ‘வலிமை’ படத்தில் வில்லனாக நடிக்கும் கார்த்திகேயா தெரிவித்துள்ளார்.

எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹீமா குரேஷியும், வில்லனாக கார்த்திகேயாவும் நடிக்கிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். பொங்கலையொட்டி ‘வலிமை’ வெளியாகிறது. இந்த நிலையில், இப்படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்துள்ள தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நேற்று தனது 29 வது பிறந்தநாளைக் கொண்டாடினார். ‘வலிமை’ தயாரிப்பாளர் போனி கபூர் கார்த்திகேயாவின் புதிய போஸ்டரை வெளியிட்டிருந்தார். கார்த்திகேயாவின் பிறந்தநாளை அவரது ரசிகர்களை விட அஜித் ரசிகர்கள்தான் சமூக வலைதளங்களில் கொண்டாடி தீர்த்துவிட்டார்கள்.

இதில் நெகிழ்ந்துபோன கார்த்திகேயா தனது ட்விட்டர் பக்கத்தில், “பிறந்தநாளுக்கு வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. குறிப்பாக, அஜித் சார் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் நன்றி. ’வலிமை’ படம் அஜித் சார் சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத படமாக இருக்கும். சிறந்த படமாக மாற்ற என்னுடைய சிறந்த நடிப்பை வழங்கியுள்ளேன்” என்று உற்சாகமுடன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com