வலிமை அப்டேட்: அஜித்தின் 50-வது பிறந்தநாளில் ரிலீஸ் செய்ய படக்குழு தீவிரம்!

வலிமை அப்டேட்: அஜித்தின் 50-வது பிறந்தநாளில் ரிலீஸ் செய்ய படக்குழு தீவிரம்!

வலிமை அப்டேட்: அஜித்தின் 50-வது பிறந்தநாளில் ரிலீஸ் செய்ய படக்குழு தீவிரம்!
Published on

அஜித்தின் 50 வது பிறந்தநாளையொட்டி அடுத்த ஆண்டு மே 1 ஆம் தேதி வலிமை படம் ரிலீஸ் ஆகும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. அதற்காக, கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குக்கூட விடுமுறை எடுக்காமல் கடுமையாக பணியாற்றிவருகிறது படக்குழு.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில், அஜித் நடித்த  ’நேர்கொண்ட பார்வை’ கடந்த ஆண்டு வெளியாகி பாராட்டுக்களைக் குவித்தது. இப்படத்தினை 'சதுரங்க வேட்டை', 'தீரன் அதிகாரம் ஒன்று' வெற்றி இயக்குநர் ஹெச். வினோத் இயக்கி இருந்தார். 'நேர்கொண்ட பார்வை'-யின் வெற்றியால், இக்கூட்டணி மீண்டும் ’வலிமை’ படத்தில் இணைந்தது.

ஈஸ்வர மூர்த்தி’ என்ற பெயரில் அஜித் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். கடந்த செப்டம்பர் மாதம்தான், இப்படத்தின் ஷூட்டிங் சென்னையின் புறநகர் பகுதிகளில் நடந்தது. அதில், அஜித் பைக் ரேசிங் காட்சிகளிலும் நடித்தார். தற்போது, ஹைதராபாத்தில் ஷூட்டிங் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. சமீபத்தில் அஜித்துக்கு படப்பிடிப்பில் சிறய விபத்தும் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

View this post on Instagram

A post shared by U1 (@itsyuvan)

தற்போது, ஹைதராபாத்தில் மீண்டும் படப்பிடிப்பில் இணைந்துள்ள அஜித் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். ஜனவரிக்குள் படத்தை முடித்து அஜித்தின் 50 வது பிறந்தநாளான மே 1 ஆம் தேதி தியேட்டர்களில் கொண்டுவர கடுமையாக படக்குழு உழைத்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஏற்கனவே, வலிமை படத்தின் அப்டேட்டை அஜித் ரசிகர்கள் தொடர்ந்து கேட்டுவருவதால், கிறிஸ்துமஸ், புத்தாண்டுகளில்கூட விடுமுறை இல்லாமல் படப்பிடிப்பை முடித்து அஜித் பிறந்தநாளுக்கு கொண்டுவந்தால் அவரது ரசிகர்களுக்கு டபுள் கொண்டாட்டமாக இருக்கும் என்று நினைக்கிறது படக்குழு. அதனை, உறுதிபடுத்தும் விதமாக வலிமை படத்தின் இசையமைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதாக இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அப்டேட் கொடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com