வலிமை பட ஷூட்டிங் மீண்டும் சென்னையில் துவக்கம்: ரேஸ் காட்சியில் அஜித்!
அஜித்தின் ‘வலிமை’ பட ஷூட்டிங் சென்னையில் நேற்று முதல் துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் அஜித்தின் 60 படமாக வெளியாகும் வலிமை படத்தை எச்.வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்கிறார். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்ய யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
கடந்த மார்ச் மாதம் சென்னை புறநகர் பகுதிகளின் இதன் படப்பிடிப்புகள் நடந்துவந்த நிலையில் கொரோனா காரணத்தால் ஷூட்டிங் முற்றிலும் நிறுத்தப்பட்டது. தற்போது தமிழக அரசு சினிமா ஷூட்டிங் நடக்க அனுமதி அளித்துள்ளதால் மீண்டும் விட்ட படபிடிப்பை சென்னையில் துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நேற்று துவங்கியுள்ள இதன் படப்பிடிப்பில் அஜித் ரேஸ் செய்யும் காட்சிகள் படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அஜித், வினோத், போனிகபூர் கூட்டணி ஏற்கெனவே ‘நேர்கொண்ட பார்வை’யில் வெற்றி பெற்றதால், வலிமை படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.