25வது நாளை நெருங்கும் 'வலிமை' - இதுவரையிலான வசூல் எவ்வளவு?

25வது நாளை நெருங்கும் 'வலிமை' - இதுவரையிலான வசூல் எவ்வளவு?

25வது நாளை நெருங்கும் 'வலிமை' - இதுவரையிலான வசூல் எவ்வளவு?
Published on
வலிமை திரைப்படம் 25வது நாளை நெருங்க உள்ள நிலையில், சென்னை திரையரங்கில் சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி வெளியானது. இன்றுடன் படம் வெளியாகி 25வது நாளை எட்ட இருக்கிறது. தமிழகத்தின் பல்வேறு திரையரங்குகளில் வலிமை படத்தை இன்றும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் திருநெல்வேலியில் இருக்கும் ராம் முத்துராம் திரையரங்கில் 25வது நாளை முன்னிட்டு சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அதன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், ''வலிமை படம் வெளியாகி 25வது நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று சிறப்பு கொண்டாட்டதிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுளது. இதற்கான முன்பதிவு இன்று மாலை 7 மணிக்கு தொடங்குகிறது.'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று வரை வலிமை படம் 224.80 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com