‘வலிமை’ பட பைக் சண்டைக் காட்சிக்காக பயிற்சி எடுக்கும் ஹூமா குரேஷி?

‘வலிமை’ பட பைக் சண்டைக் காட்சிக்காக பயிற்சி எடுக்கும் ஹூமா குரேஷி?
‘வலிமை’ பட பைக் சண்டைக் காட்சிக்காக பயிற்சி எடுக்கும் ஹூமா குரேஷி?

‘வலிமை’ பட நாயகி ஹூமா குரேஷி பைக் சண்டைக் காட்சிக்காக பயிற்சி எடுத்து வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.

நடிகர் அஜித்தை வைத்து ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை இயக்கியவர் இயக்குநர் எச்.வினோத். இவரது அடுத்த படமான 'வலிமை'யில் அஜித் மீண்டும் நடித்து வருகிறார். இதில் அஜித் ஒரு போலீஸ்காரராக நடித்து வருவதாகவும் தெரிகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அச்சம் நிலவி வருவதால், இங்கு நடந்து வந்த படப்பிடிப்பு சில தினம் முன்பு நிறுத்தப்பட்டது.

மேலும் ‘வலிமை’ படப்பிடிப்புக்காக வெளிநாடு செல்லவிருந்த திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் சில பகுதிகள் பைக் பந்தயத்தை அடிப்படையாக வைத்து எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்போது, இப்படம் குறித்து ஒரு தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இப்படத்தின் நாயகி ஹூமா குரேஷி, சில பைக் சண்டைக் காட்சிகளுக்காக பயிற்சி எடுத்து வருவது தெரியவந்துள்ளது. அவர் அஜித்துடன் இணைந்து நடிக்க உள்ள காட்சிக்காக இந்தப் பயிற்சியை மேற்கொண்டு வருதாகவும் தெரிகிறது.

ஹூமா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ காட்சியை பகிர்ந்து கொண்டுள்ளார். அவர் ராயல் என்ஃபீல்ட் வாகனத்தில் சவாரி செய்யும் காட்சி அதில் பதிவாகியுள்ளது. அதனைக் காணும்போது இதற்கான பயிற்சியில் அவர் ஏற்கெனவே ஈடுபட்டு தேறி இருப்பதாகவே தெரிகிறது. அவருடன் இணைந்து இந்தப் பயிற்சியில் அவரது தோழிகளும் ஈடுபட்டுள்ளனர் எனத் தெரிகிறது.

இப்படம் முழுவதும் அஜித்துடன் சேர்ந்து பயணம் செய்யும் ஒரு கதாபாத்திரத்தில் ஹூமா குரேஷி நடித்து வருகிறார். படத்தின் ஸ்கிரிப்ட் படி இவருக்கும் பைக்கில் ஸ்டண்ட் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆகவேதான் இதனை அவர் செய்து வருகிறார் எனக் கூறப்படுகிறது. ஹூமா வெளியிட்டுள்ள பதிவில், ““இனியமையான ஞாயிற்றுக் கிழமை!! வாழ்க்கை என்பது தினமும் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வது மற்றும் உங்கள் பயத்தை மீறுவது” என்று கூறியுள்ளார்.

‘வலிமை’ திரைப்படம் தீபாவளி 2020-இல் வெளியிடப்பட உள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இதற்கு இசையமைத்து வருகிறார். நீரவ் ஷா படத்திற்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார். போனி கபூர் படத்தை தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com