“உழுத புழுதி படமாச்சு” - பாரதிராஜாவை பாட்டுப்பாடி வாழ்த்திய வைரமுத்து!

மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த பாரதிராஜாவை நேரில் சென்று நலம் விசாரித்த வைரமுத்து, அவரை பாராட்டி எழுதிய கவிதை இணையத்தில் பரவி வருகிறது.
vairamuthu, barathi raja
vairamuthu, barathi rajapt web

1977 ஆம் ஆண்டு வெளியான 16 வயதினிலே திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாரதிராஜா, கிராமப்புற மக்களின் வாழ்க்கையை எதார்த்தமாகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும் படம்பிடித்து சினிமாவில் தனக்கென தனி முத்திரை பதித்தவர். ஸ்டூடியோக்களுக்குள் படமாக்கப்பட்ட திரைப்படங்களை மட்டுமே கண்டுகொண்டிருந்த தமிழ் மக்களுக்கு செம்மண் நிலத்தையும், கடைக்கோடி கிராமத்தையும் திரையில் காட்டியவர் அவர்தான்.

அப்படி பலராலும் கொண்டாடப்பட்டு, இயக்குநர் இமயம் என மக்களால் அழைக்கப்பட்ட பாரதிராஜா, தற்போது இவர் உடல்நிலை குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார் பாடலாசிரியர் வைரமுத்து. இந்த சந்திப்பின்போது நாயகன் திரைப்படத்தில் இடம்பெற்ற தென்பாண்டி சீமையிலே பாடல் வரிகளை பாரதிராஜாவிற்கான பாடலாக மாற்றி அதை அவரே பாடவும் செய்துள்ளார்.

இதுகுறித்த வீடியோ பதிவையும் இணையத்தில் பகிர்ந்துள்ள வைரமுத்து அதில் ‘எழுந்து வா இமயமே’ என குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com