சினிமா
பிரதமராகத்தான் வாய்ப்பில்லை, துணைவேந்தருக்குமா தகுதியில்லை?: வைரமுத்து கேள்வி
பிரதமராகத்தான் வாய்ப்பில்லை, துணைவேந்தருக்குமா தகுதியில்லை?: வைரமுத்து கேள்வி
தமிழருக்கு பிரதமராகதான் வாய்ப்பில்லை, துணைவேந்தருக்கு தகுதியில்லையா என பாடலாசிரியர் வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக எம்.கே.சூரப்பா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர். தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி கடுமையான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நேரத்தில் அண்ணா பல்கலைகழகத்திற்கு கர்நாடகாவை சேர்ந்தவர் துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளதால், அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள வைரமுத்து, “இந்தியாவின் பிரதமர் பதவிக்குத்தான் ஒரு தமிழருக்கு வாய்ப்பில்லை. துணைவேந்தர் பதவிக்குமா ஒரு தமிழருக்குத் தகுதியில்லை? இதுபோன்ற செயல்களெல்லாம் தமிழகத்தைத் தனிமைப்படுத்தவா? தனிப்படுத்தவா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.