வைரமுத்துவுக்கு உண்மை கண்டறியும் சோதனை செய்ய வேண்டும் - சின்மயி

வைரமுத்துவுக்கு உண்மை கண்டறியும் சோதனை செய்ய வேண்டும் - சின்மயி
வைரமுத்துவுக்கு உண்மை கண்டறியும் சோதனை செய்ய வேண்டும் - சின்மயி

''வைரமுத்துவுக்கு உண்மை கண்டறியும் சோதனைதான் செய்ய வேண்டும்'' என்று பாடகி சின்மயி தெரிவித்துள்ளார்.

பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் பலர் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை #MeToo என்ற பிரசாரம் மூலம் வெளிப்படையாக தெரிவித்து வருகின்றன்றனர். பாடலாசிரியர் வைரமுத்து மீதான பாடகி சின்மயின் புகாரை அடுத்து தமிழகத்திலும் இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

பாடகி சின்மயி புகாருக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சின்மயி ''நான் தெரிவித்த குற்றச்சாட்டை வைரமுத்து மறுக்கவில்லை. ‘சமீபகாலமாக என்னை அவமதிக்கும் வகையில் தொடர்ச்சியாக பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. அதில் இதுவும் ஒன்று’ என்றுதான் கூறினார். என் பக்கம் உண்மை இருக்கிறது. எனக்கு எவ்விதமாக கவலையும் இல்லை. நான் உண்மையைதான் சொல்கிறேன் என்று வைரமுத்துவிற்கே தெரியும்.பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விவகாரம் என்பதால் வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆதாரங்கள் இல்லை. ஒருவர் முன்வந்து சொன்னால்தான் உண்மைகள் வெளியே வரும்'' என்று தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று வீடியோ மூலம் விளக்கம் கொடுத்த வைரமுத்து, ''சின்மயி புகார் பொய்யானது என்பதற்கு அசைக்க முடியாத ஆதாரங்களை வைத்துள்ளேன். நான் நல்லவனா..? இல்லை கெட்டவனா..? என்பதை இப்போதே முடிவு செய்ய வேண்டாம். நீதிமன்றம் சொல்லட்டும். குற்றச்சாட்டுகள் அனைத்தும் உள்நோக்கம் கொண்டவை. சம்பந்தப்பட்டவர்கள் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயாராக இருக்கிறேன்'' என்று தெரிவித்திருந்தார். 

வைரமுத்துவின் வீடியோவுக்கு கருத்து தெரிவிக்கும் விதமாக ட்வீட் செய்துள்ள சின்மயி ''வைரமுத்துவுக்கு உண்மை கண்டறியும் சோதனைதான் செய்ய வேண்டும்'' என்று பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் நீங்கள் தான் உண்மை கண்டறியும் சோதனையை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று ஒருவர் பதிவிட்டிருந்தார். அதற்கு பதிலளித்த சின்மயி "நிச்சயமாக. எனக்கு தைரியம் உள்ளது.வைரமுத்து செய்வாரா?" என கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com