வைரமுத்து
வைரமுத்துமுகநூல்

ஆதங்கப்பட்டு பேசிய வைரமுத்து.. என்ன காரணம்?

கவிஞராகவும், பாடலாசிரியராகவும் வலம் வரும் வைரமுத்து, தற்போது தனது சமூக வலைதளப்பக்கத்தில் ஆதங்கத்துடன் பதிவு ஒன்றிவை வெளியிட்டுள்ளார்.
Published on

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்பட தலைப்புகள், பாடல் வரிகளை வைத்து வந்துள்ளன. அந்தவகையில், தனது வரிகளை பட தலைப்புகளாக வைத்தவர்கள் தன்னிடம் மரியாதைக்குக் கூட ஒரு வார்த்தை சொன்னதில்லை என்று ஆதங்கமாக வைரமுத்து தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார் .

1980-ம் ஆண்டு வெளியான நிழல்கள் படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர் வைரமுத்து. அதன்பின்னர் ரஜினி, கமல், பிரசாந்த், அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலரின் படங்களுக்கு பாடல்களை எழுதி ரசிகர்களை கவர்ந்தார். இவர் முதல் மரியாதை, ரோஜா, கருத்தம்மா, பவித்ரா, சங்கமம், கன்னத்தில் முத்தமிட்டால், தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை உள்ளிட்ட படங்களுக்காக சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை பெற்றார். கவிஞராகவும், பாடலாசிரியராகவும் வலம் வரும் வைரமுத்து, தற்போது தனது சமூக வலைதளப்பக்கத்தில் ஆதங்கத்துடன் பதிவு ஒன்றிவை வெளியிட்டுள்ளார்.

அதில், தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்பட தலைப்புகள், பாடல் வரிகளை வைத்து வந்துள்ளன. அந்தவகையில், தனது வரிகளை பட தலைப்புகளாக வைத்தவர்கள் தன்னிடம் மரியாதைக்குக் கூட ஒரு வார்த்தை சொன்னதில்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இதுகுறித்து தெரிவித்துள்ள அவர்,

வைரமுத்து
”நாடி நரம்பெல்லாம் சிலிர்த்துப் போய்விட்டது..” முத்தமழை பாடலை புகழ்ந்த செல்வராகவன்!

” என்னுடைய பல்லவிகள் பலவற்றைத் தமிழ்த் திரையுலகம் படத் தலைப்புகளாகப் பயன்படுத்தி இருக்கிறது

அப்படி எடுத்தாண்டவர்கள் யாரும் என்னிடம் அனுமதி பெறவில்லை என்பதோடு மரியாதைக்குக்கூட ஒரு வார்த்தையும் கேட்டதில்லை

ஒன்றா இரண்டா...

பொன்மாலைப் பொழுது, கண் சிவந்தால் மண் சிவக்கும், இளைய நிலா, ஊரத் தெரிஞ்சுகிட்டேன், பனிவிழும் மலர்வனம், வெள்ளைப் புறா ஒன்று, பூவே பூச்சூட வா, ஈரமான ரோஜாவே, நிலாவத்தான் கையில புடிச்சேன், மெளன ராகம், மின்சாரக் கண்ணா, கண்ணாளனே, என்னவளே, உயிரே, சண்டக்கோழி, பூவெல்லாம் கேட்டுப் பார், தென்மேற்குப் பருவக்காற்று, விண்ணைத் தாண்டி வருவாயா, நீ தானே என் பொன் வசந்தம், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், தங்கமகன்

இப்படி இன்னும் பல...

சொல்லாமல் எடுத்துக் கொண்டதற்காக இவர்கள் யாரையும் நான் கடிந்து கொண்டதில்லை காணும் இடங்களில் கேட்டதுமில்லை

செல்வம் பொதுவுடைமை ஆகாத சமூகத்தில் அறிவாவது பொதுவுடைமை ஆகிறதே என்று அகமகிழ்வேன்

ஏன் என்னைக் கேட்காமல் செய்தீர்கள் என்று கேட்பது எனக்கு நாகரிகம் ஆகாது

ஆனால் என்னை ஒருவார்த்தை கேட்டுவிட்டுச் செய்வது அவர்களின் நாகரிகம் ஆகாதா? ” என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com