"அஞ்சல்துறை தேர்வில் தமிழ் புறக்கணிப்பா? சினத்தோடு கண்டிக்கிறோம்!" - வைரமுத்து

"அஞ்சல்துறை தேர்வில் தமிழ் புறக்கணிப்பா? சினத்தோடு கண்டிக்கிறோம்!" - வைரமுத்து
"அஞ்சல்துறை தேர்வில் தமிழ் புறக்கணிப்பா? சினத்தோடு கண்டிக்கிறோம்!" - வைரமுத்து

அஞ்சல் துறை தேர்வுக்கான தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டிருப்தற்கு அரசியல்வாதிகளும் தமிழ் ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த ஆண்டிற்கான அஞ்சல்துறை கணக்காளர் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், மாநில மொழிகள் விடுப்பட்டிருக்கின்றன. இதனைக் பலத் தரப்பினரும் கண்டித்து வருகின்றனர்.

இந்நிலையில், பாடலாசிரியர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில், “அஞ்சல்துறைத் தேர்வுக்குத் தமிழில் தயாராகிக் கொண்டிருந்த ஒரு தலைமுறையின் தலையில் இடி விழுந்திருக்கிறது. ஆங்கிலத்திலும் இந்தியிலும்தான் தேர்வெழுத வேண்டுமா? இனி ஆங்கிலத்திலும் இந்தியிலும் முகவரி எழுதினால்தான் அஞ்சல் சென்று சேருமா? சினத்தோடு கண்டிக்கிறோம்என்று கண்டனங்களை பதிவு செய்துள்ளார்.

அதோடு, நடிகர் சரத்குமாரும் “அஞ்சல் துறை தேர்வுகளில் தமிழ் புறக்கணிக்கப்பட்டிருப்பது ஏற்புடையதல்ல. தமிழ் மொழியை இணைத்து புதிய அறிவிப்பு வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று தனது கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com