\
வெப்சீரிஸில் கலக்கப்போகிறார் வடிவேலு: எந்த படத்தின் இயக்குநர் தெரியுமா?

வெப்சீரிஸில் கலக்கப்போகிறார் வடிவேலு: எந்த படத்தின் இயக்குநர் தெரியுமா?

வெப்சீரிஸில் கலக்கப்போகிறார் வடிவேலு: எந்த படத்தின் இயக்குநர் தெரியுமா?
Published on: 

நகைச்சுவை நடிகர் வடிவேலு இயக்குநர் சுராஜ் இயக்கவிருக்கும் திகில் காமெடி வெப்சீரிஸில் நடிக்கவிருக்கிறார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த நடிகர் விஜயின் மெர்சல் படத்திற்கு பிறகு வேறெந்த படத்திலும் நடிக்காமல் இருந்தார் வடிவேலு.

தலைநகரம், மருதமலை, கத்திச்சண்டை போன்ற வடிவேலுவின் சிறப்பான நகைச்சுவைக் காட்சிகள் இடம்பெற்ற படங்களை இயக்கிய சுராஜ்தான் இந்த வெப்சீரிஸையும் இயக்கவிருக்கிறார். இந்த சீரிஸ் சந்திரமுகி, காஞ்சனா, முனி போன்ற படங்களைப்போல் திகில் காமெடி வகையை சேர்ந்ததாக இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடிவேலு மற்றும் சுராஜ் இணைந்து இந்த ஆண்டின் இறுதியில் ஒரு படத்தில் பணி புரிய இருப்பதாகவும், அதற்கு முன்பாகவே இந்த வெப்சீரிஸை இயக்க திட்டமிட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது. இந்த வெப்சீரிஸ் 10 பாகங்களை கொண்டதாக இருக்கும் எனவும், இதுபற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாக இருப்பதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த வெப்சீரிஸ் அமேசான் பிரைம் அல்லது நெட்பிளிக்ஸில் ஒளிபரப்பாக வாய்ப்புள்ளதால், அதுபற்றிய பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.