விஜயுடன் கூட்டணி.. மீண்டும் ஃபார்முக்கு திரும்பும் வடிவேலு!
அட்லி இயக்கும் விஜய் 61 படத்தில் மீண்டும் வடிவேலு முழுநீளக் காமெடியனாக களமிறங்க இருக்கிறார்.
நடித்தால் ஹீரோ என பிடிவாதம் பிடித்து வந்த வடிவேலுவின் திட்டம் பலிக்கவில்லை. அடுத்து இறங்கி வந்த அவர் ஒருசில படங்களில் சில நிமிடங்களே வந்து தலைகாட்டிவிட்டுப் போனார்.
இந்நிலையில், விஜய்61 படத்தில் முழு நீள காமெடியனாக இருக்கிறாராம். இதற்காக ஒன்றரை மாதம் கால்ஷீட் ஒதுக்கி இருக்கிறார் அவர். அவருக்கான காட்சிகள் சென்னையிலும், ஐரோப்பாவிலும் ஷூட் செய்யப்பட இருக்கிறது. விஜயுடன், வடிவேலு நடித்த பல படங்கள் காமெடியில் சிறப்பாக அமைந்திருந்தது. இதனையடுத்து வடிவேலுவை விஜய் படத்திற்காக மீண்டும் முழுநீளக் காமெடியனாக்கி இருக்கிறார் அட்லி. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால், நித்யாமேனன் ஆகியோர் நடித்து வருகின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

