‘வடக்கன்’ பட டைட்டிலுக்கு எதிர்ப்பு தெரிவித்த சென்சார் போர்டு.. படத்தின் பெயரை மாற்றிய படக்குழு!

வடக்கன் பட டைட்டிலுக்கு எதிர்ப்பு எழுந்த நிலையில், படத்தின் தலைப்பை டைரக்டர் மாற்றியுள்ளார்.
வடக்கன் திரைப்பட குழு
வடக்கன் திரைப்பட குழுweb

’வடக்கன்’ பட டீசர் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகியது. இத்திரைப்படத்தின் டீசரில் அதன் வசனங்களும் காட்சிகளும் பொதுமக்களிடையே கலவையான கருத்துக்களையே பெற்றிருந்தது. சென்சார் போர்டிலும் இத்திரைப்படத்தின் தலைப்பு மற்றும் வசனங்களுக்கு கடுமையான எதிர்ப்பு நிலவியது. இதனால் படத்தின் டைட்டிலை மாற்றியுள்ளார் திரைப்படத்தின் இயக்குநர் பாஸ்கர் சக்தி.

vadakkan
vadakkan

எழுத்தாளர் பாஸ்கர் சக்தி வெண்ணிலா கபடி குழு, எம்டன் மகன், யாக்கை, நான் மகான் அல்ல உட்பட பல படங்களுக்கு வசனம் எழுதியவர். தேசிய விருதுபெற்ற ‘அழகர்சாமியின் குதிரை’ படத்திற்கும் கதை மற்றும் வசனம் என இரண்டையும் எழுதியிருந்தார்.

வடக்கன் திரைப்பட குழு
வடக்கன் திரைப்பட குழு

இந்நிலையில், பாஸ்கர் சக்தி வடக்கன் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். டிஸ்கவரி சினிமாஸ் மற்றும் திருப்பதி பிரதர்ஸ் சேர்ந்து தயாரித்துள்ள இத்திரைப்படத்தில் முத்துசாமி, வைரமாலா, எழுத்தாளர் ரமேஷ் வைத்யா, பிண்டு, வந்தனா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். எஸ்.ஜே.ஜனனி இசையமைத்துள்ளார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். திருப்பதி பிரதர்ஸ் நிறுவனர் மற்றும் இயக்குநரான லிங்குசாமி இத்திரைப்படத்தின் தியேட்டர் வெளியீட்டு உரிமையை பெற்றுள்ளார்.

வடக்கன் திரைப்பட குழு
“வெற்றிமாறன், பா. ரஞ்சித் இயக்கினால் மோடியின் சுயசரிதையில் நடிப்பேன்!” வதந்தியை மறுத்த சத்யராஜ்!

படத்தில் எழுந்த சர்ச்சை என்ன?

’வடக்கன்’ பட டீசர் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகியது. இத்திரைப்படத்தின் டீசரில் அதன் வசனங்களும் காட்சிகளும் பொதுமக்களிடையே சில விமர்சனங்களையும் பெற்றிருந்தன. டீசரில் இடம் பெற்ற காட்சிகளில் தமிழ்நாட்டை சேர்ந்த கதாநாயகன் வடமாநில தொழிலாளிகளிடம் அடி வாங்கி வந்தது போலவும், இதுபோன்ற தொழிலாளர்களால் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன.

வடக்கன்
வடக்கன்

அது மட்டுமில்லாமல் ”வெளியூர்ல இருந்து பிழைக்க வந்தவன் இங்குள்ள வடையை சாப்பிட மாட்டானா, அவனுக்காக பானிபூரி, பேல்பூரின்னு போட்டுட்டு இருப்பியா” போன்ற வசனங்கள் இணையத்தில் வைரலாகி வந்தது.

வடக்கன் திரைப்பட குழு
“தென் மாவட்டத்தில் உளவியல் ரீதியாக அனைவர் மனதிலும் ஜாதி உள்ளது” - இயக்குனர் மாரி செல்வராஜ்

மாற்றிவைக்கப்பட்ட படத்தின் தலைப்பு!

தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்கள் அதிகளவில் வேலை பார்க்கும் சூழல் நிலவுகிறது. அதேசமயத்தில், தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு குறைந்துவருகிறது என்ற எண்ணமும் மக்கள் மத்தியில் நிலவுகிறது. ஆனாலும் வடமாநில மக்கள் தமிழகத்தை பாதுகாப்பான இடமாகவே கருதுகின்றனர். இவ்வாறு இருக்கையில் வடக்கன் திரைப்படத்தின் டீசர் சென்சார் போர்டில் எதிர்ப்பை சம்பாதித்தது.

இந்நிலையில்தான் படத்தின் டைட்டிலை மாற்றி ”ரயில்” என்று பெயரிட்டுள்ளார் இயக்குநர் பாஸ்கர் சக்தி. படத்தின் வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று தயாரிப்பு நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கன் திரைப்பட குழு
Garudan review | நியாயமா... விசுவாசமா... கருடனின் வழி எது..?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com