மேலும் ஒரு கெளரவம்... சீன திரைப்பட விழாவில் வடசென்னை
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள வடசென்னை திரைப்படம் சீனாவில் நடைபெற உள்ள பிங்யாவோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது.
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் மூன்றாவதாக இணைந்து உருவாகியுள்ள படம் வடசென்னை. முன்னதாக இந்த கூட்டணி பொல்லாதவன், ஆடுகளம் ஆகிய வெற்றிப்படங்களை கொடுத்தது. வடசென்னை படத்தில் சமுத்திரகனி, கிஷோர், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், அமீர் உள்ளிட்ட நடிகர் பட்டாளமே நடித்துள்ளது.
சென்னையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட கதைக்களத்தில் உருவாகியுள்ள வடசென்னையின் டீசர் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள நிலையில் சமீபத்தில் வெளியான பாடல்களும் ஹிட் அடித்துள்ளன. அக்டோபர் 18ம் தேதி திரைப்படம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் மேலும் ஒரு கெளரவமாக சீனாவில் நடைபெற உள்ள பிங்யாவோ சர்வதேச திரைப்பட விழாவில் வடசென்னை திரையிடப்பட உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
அக்டோபர் மாதம் 11 முதல் 20ஆம் தேதி வரை சீனாவில், பிங்யாவோ சர்வதேச திரைப்பட விழா நடைபெற உள்ளது.