தனுஷின் ‘வடசென்னை’ மூன்று பாகமாம்?

தனுஷின் ‘வடசென்னை’ மூன்று பாகமாம்?

தனுஷின் ‘வடசென்னை’ மூன்று பாகமாம்?
Published on

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘வடசென்னை’ படத்தின் ட்ரெய்லர் ஜூலை 28 அன்று வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’ படங்களுக்கு பிறகு தனுஷ் இணையும் திரைப்படம் ‘வடசென்னை’. இவர்கள் இருவரின் கூட்டணியில் ஏற்கெனவே உருவான இரண்டு படங்களும் நல்ல வரவேற்பை பெற்றன. ஆகவே தனுஷின் ஆஸ்தான இயக்குநராக வெற்றிமாறன் அடையாளம் காணப்பட்டார். சில வருடங்களுக்கு முன்பே இவரது இயக்கத்தில் உருவாக உள்ள ‘வடசென்னை’யில் தனுஷ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் குறித்த நேரத்தில் இருவரும் இணைவதில் சில சிக்கல்கள் எழுந்தன. பிறகு படப்பிடிப்பு தொடங்கியும் கூட சில தாமதங்கள் நிலவியன. பிறகு வடசென்னையில் தனியாக செட் போடப்பட்டு படப்பிடிப்பு வேலைகள் மும்முரமாகின. இந்தப் படம் மொத்தம் மூன்று பாகங்களாக உருவாக உள்ளது. அதில் முதல் பாகம் மட்டும் தற்போது முழுமையாக முடிந்துள்ளது. உலக அளவில் ஒருவன் சாம்பியன் ஆக பயிற்சி எடுத்து கொண்டிருக்கும் போது இடையில் ஏற்படும் திடீர் திருப்பத்தால் எப்படி கேங்ஸ்டராக உருமாறுகிறான் என்பதை கதையின் பின்புலமாக இயக்குநர் வைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.  இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஆன்ட்ரியா, சமுத்திரக்கனி, அமீர், டேனியல் பாலாஜி, கிஷோர், கருணாஸ், சுப்ரமணியம் சிவா, சீனு மோகன், டேனியல் என பலர் நடித்துள்ளனர். 

வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் ஃபிலிம்ஸ் இதனை தயாரித்துள்ளது. இந்நிலையில் வரும் ஜூலை மாதம் 28ம் தேதி படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com