நடிகர் தீப்பெட்டி கணேசன் உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி

நடிகர் தீப்பெட்டி கணேசன் உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி

நடிகர் தீப்பெட்டி கணேசன் உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி
Published on

மறைந்த திரைப்பட நடிகர் தீப்பெட்டி கணேசன் உடலிற்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

தமிழ் திரையுலகில் ரேணிகுண்டா , கண்ணே கலைமானே உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்தவர் மதுரையைச் சேர்ந்த தீப்பெட்டி கணேசன். இவர் உடல் நலக்குறைவால் இன்று காலை மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து அவரது உடல் மதுரை ஜெய்ஹிந்த்புரம் ராமையா தெருவில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், மதுரையில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்,நடிகர் தீப்பெட்டி கணேசன் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அவரது மனைவி மற்றும் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com