“எனது பெற்றோருக்கு கொரோனா தொற்று உறுதி” - தமன்னா ட்வீட்

“எனது பெற்றோருக்கு கொரோனா தொற்று உறுதி” - தமன்னா ட்வீட்
“எனது பெற்றோருக்கு கொரோனா தொற்று உறுதி” - தமன்னா ட்வீட்

தனது பெற்றோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக நடிகை தமன்னா தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. சினிமாப் பிரபலங்கள் பலரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் நடிகை தமன்னா தனது பெற்றோருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “கடந்த வார இறுதியில் என் பெற்றோருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதைக் கண்டோம். உடனே வீட்டில் இருக்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்நிலையில் கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளியாகி, அதில் எனது பெற்றோருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், “அவர்களது உடல்நிலை குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் கொடுத்துள்ளனர். அத்துடன் அவர்கள் கொடுத்த அறிவுரைகளை பின்பற்றி இருக்கிறோம். குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களுக்கும், எனக்கும், பணியாளர்களுக்கும் கொரோனா இல்லை என்பது உறுதியாகியுள்ளது. கடவுளின் அருளால் எனது பெற்றோர் நலமுடன் உள்ளனர். அத்துடன் உங்களது பிரார்த்தனைகள் மற்றும் ஆசிர்வாதங்களால் அவர்கள் விரைவில் குணமடைவார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com