\
உதயநிதி ஸ்டாலினின் 'சைக்கோ' டிசம்பர் ரிலீஸ்

உதயநிதி ஸ்டாலினின் 'சைக்கோ' டிசம்பர் ரிலீஸ்

உதயநிதி ஸ்டாலினின் 'சைக்கோ' டிசம்பர் ரிலீஸ்
Published on

கண் பார்வை இழந்த மாற்றுத்திறனாளியாக மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் "சைக்கோ" திரைப்படம் டிசம்பர் 27 ஆம் தேதி வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

"துப்பறிவாளன்' படத்தைத் தொடர்ந்து மிஷ்கின் அடுத்ததாக இயக்கியுள்ள படம் 'சைக்கோ'. உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் அதிதிராவ் ஹைதரி, நித்யா மேனன், இயக்குநர் ராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

அங்குலிமாலா பற்றிய புகழ்பெற்ற புத்தமத கதையை தழுவி 'சைக்கோ' படம் உருகிவாகியிருப்பதாக கூறப்படுகிறது. 'சைக்கோ' படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்றுவரும் நிலையில் அண்மையில் படத்தின் டீஸர் வெளியிடப்பட்டது. இந்நிலையில் இன்று புதிய போஸ்டரை வெளியிட்ட பட நிறுவனம், "சைக்கோ" டிசம்பர் 27 ஆம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com