ஒரு குப்பை கதை'யை வெளியிடும் உதயநிதி ஸ்டாலின்

ஒரு குப்பை கதை'யை வெளியிடும் உதயநிதி ஸ்டாலின்

ஒரு குப்பை கதை'யை வெளியிடும் உதயநிதி ஸ்டாலின்
Published on

நடன இயக்குநர் தினேஷ் நாயகனாக நடிக்கும் 'ஒரு குப்பைக் கதை' எனும் படத்தை தனது நிறுவனம் சார்பில் வெளியிட இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

பெரும் ஹீரோக்கள், அதிக பட்ஜெட் படங்களை மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் வாங்கி வெளியிடும் சூழல் மாறி எதார்த்தமான கதையம்சம் சிறிய பட்ஜெட் படங்களை வாங்கி வெளியிடும் போக்கு சமீபத்தில் அதிகரித்து வருகிறது. இந்த ஆரோக்கியமான சூழலில் சில ஆண்டுகளுக்கு முன்பே மைனா படத்தை வாங்கி வெளியிட்டது உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயண்ட் மூவீஸ். தற்போது அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட ஒரு குப்பை கதை படத்தையும் ரெட்ஜெயண்ட் மூவீஸ் வாங்கி வெளியிட இருக்கிறது.

இயக்குநர் எழிலிடம் உதயாளராக இருந்த காளி ரங்கசாமி இயக்கி இருக்கும் இந்தப்படத்தில் நடன இயக்குநர் தினேஷ், மணிஷா யாதவ் நடித்துள்ளனர். இந்தப்படத்தை இயக்குநர் அஸ்லாம் தயாரித்துள்ளார். இந்நிலையில், ஒரு குப்பை கதை படத்தை பார்த்த உதயநிதி ஸ்டாலின் நெகிழ்ந்து விட்டாராம். உற்சாகமான அவர், தனது நிறுவனமான ரெட்ஜெயண்ட் மூவீஸ் சார்பில் படத்தை வாங்கி வெளியிட உள்ளார். இது குறித்து இப்படத்தின் தயாரிப்பாளர் அஸ்லாம் கூறும்போது, "இந்தப்படத்தை பார்க்க முடியுமா? என உதயநிதி ஸ்டாலினிடம் கேட்டோம். உடனடியாக நேரம் ஒதுக்கி ஒரு குப்பைக்கதை படத்தை பார்த்த அவர், பெரிதும் பாராட்டினார். "படம் அடித்தட்டு மக்களின் பிரச்சனையைப் பேசுகிறது. இந்தக் காலகட்டத்தில் இது போன்ற படம் அவசியம் என மனம் திறந்து பாராட்டிய உதயநிதி, தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் படத்தை வெளியிட சம்மதமும் தெரிவித்தார். ஒரு தரமான படத்தைத் தயாரித்ததற்காக என்னையும், இயக்குநரையும் உதயநிதி ஸ்டாலின் பாராட்டினார்’என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com