\
காவிரிக்காக தமிழ் திரைப்படங்களின் வெளியீடும் ஒத்திவைக்கப்படுமா..? உதயநிதி ஸ்டாலின்

காவிரிக்காக தமிழ் திரைப்படங்களின் வெளியீடும் ஒத்திவைக்கப்படுமா..? உதயநிதி ஸ்டாலின்

காவிரிக்காக தமிழ் திரைப்படங்களின் வெளியீடும் ஒத்திவைக்கப்படுமா..? உதயநிதி ஸ்டாலின்
Published on

காவிரிக்காக தமிழ் திரைப்படங்களின் வெளியீடும் ஒத்திவைக்கப்படுமா..? என உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

உச்சநீதிமன்றம் விதித்த கெடுவுக்குள் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை. இதனையடுத்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பல்வேறு அரசியல் கட்சிகள், விவசாய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தமிழகத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தக்கூடாது என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டு ஐபிஎல் போட்டிக்கு எதிரான போராட்டமும் நடைபெற்றது. பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஒரேயொரு ஐபிஎல் லீக் ஆட்டம் மட்டும் சென்னையில் நடத்தப்பட்டது. மற்ற போட்டிகள் வேறு மாநிலங்களுக்கு மாற்றப்பட்டன.

இந்நிலையில் காவிரிக்காக தமிழ் திரைப்படங்களின் வெளியீடும் ஒத்திவைக்கப்படுமா..? என உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “ ஐபிஎல் போட்டிகள்போல் தமிழ்நாட்டில் தமிழ் திரைப்படங்கள் வெளியீடுகளும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை ஒத்திவைக்கப்படுமா.. ? செயல்படாத மத்திய மாநில அரசுகளின் கவனத்தை இன்னும் அதிகமாக ஈர்க்க உதவுமே..” என தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com