\
பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி!

பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி!

பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி!
Published on

பிரியதர்ஷன் இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். 

எழில் இயக்கத்தில் ’சரவணன் இருக்க பயமே’ என்ற படத்தில் நடித்திருந்தார் உதயநிதி ஸ்டாலின். இந்தப் படம் ஹிட்டானதை அடுத்து தற்போது வெளிநாடு சென்றுள்ளார். கோடை விடுமுறைக்காக அங்கு சென்றுள்ள உதயநிதி பத்து நாட்களுக்குப் பிறகு சென்னை திரும்புகிறார். 
இதற்கிடையே பிரியதர்ஷன் இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக டிவிட்டரில் தெரிவித்துள்ளார் உதயநிதி. இந்தப் படத்தை, மூன் ஷூட் என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் சந்தோஷ் தயாரிக்கிறார். இப்போது கவுரவ் நாராயணன் இயக்கும் ‘இப்படை வெல்லும்’, பொன் ராம் இயக்கும் ‘பொதுவாக என் மனசு தங்கம்’ படங்களில் நடித்துள்ளார் உதயநிதி. இந்தப் படங்களின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. 
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com