மகிழ் திருமேனியின் கதையை தயாரித்து நடிக்கும் உதயநிதி: படத்தின் அறிவிப்பு வெளியீடு

மகிழ் திருமேனியின் கதையை தயாரித்து நடிக்கும் உதயநிதி: படத்தின் அறிவிப்பு வெளியீடு

மகிழ் திருமேனியின் கதையை தயாரித்து நடிக்கும் உதயநிதி: படத்தின் அறிவிப்பு வெளியீடு
Published on

மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கவிருக்கும் படத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது. உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ்தான் இப்படத்தையும் தயாரிக்கவிருக்கிறது.

நடிக்க வருவதற்கு முன்பே, விஜய் நடிப்பில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான குருவி படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் மூலம் தயாரித்து தயாரிப்பாளராக சினிமாவுக்குள் நுழைந்தார் உதயநிதி ஸ்டாலின். ஆதவன், மன்மதன் அம்பு, ஏழாம் அறிவு, ஒரு கல் ஒரு கண்ணாடி, நீர் பறவை உள்ளிட்ட படங்களை தயாரித்தார். கடந்த ஆண்டு வெளியான கண்ணே கலைமானே படம்தான் உதயநிதியின் தயாரிப்பில் வெளிவந்த கடைசிப்படம். இந்நிலையில், மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிக்கவிருக்கும் படத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது.

தமிழ் சினிமாவில் தனெக்கென தனி பாணியை கடைப்பிடித்து வெற்றி பெற்றவர் இயக்குநர் மகிழ் திருமேனி. இயக்குநர் செல்வராகவன், கெளதம் மேனன் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்ததாலேயே இவரது கதைகளும் வித்யாசமானவைதான்.இந்நிலையில், மகிழ் திருமேணி அடுத்தப்படம் எப்போது இயக்குவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துவந்த நிலையில், தனது அடுத்தப்படத்தை உதயநிதி  ஸ்டாலினை வைத்து இயக்கவிருக்கிறார் என்று தகவல் முன்பே வெளியானது.

இப்போது, அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்க, பிசாசு படத்தின் இசையமைப்பாளர் அரோல் கொரேலி இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com