\
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்: நேரில் வாழ்த்திய தயாரிப்பாளர் போனி கபூர்

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்: நேரில் வாழ்த்திய தயாரிப்பாளர் போனி கபூர்

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்: நேரில் வாழ்த்திய தயாரிப்பாளர் போனி கபூர்
Published on: 

நடிகர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளுக்கு நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார் தயாரிப்பாளர் போனி கபூர்.

நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 44 வது பிறந்தநாளைக் கொண்டாடியிருக்கிறார். இதனையொட்டி, பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துவரும் நிலையில் தயாரிப்பாளர் போனிகபூர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார்.

பாலிவுட்டில் சூப்பர் ஹிட் அடித்த ‘ஆர்டிகிள் 15’படத்தின் தமிழ் ரீமேக்கான ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தை உதயநிதி நடிப்பில் போனிகபூர் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை அருண்ராஜா காமராஜ் தயாரிக்கிறார். ’பிக்பாஸ்’ ஆரி, சுரேஷ் சக்ரவர்த்தி உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். தெலுங்கு நடிகர் டாக்டர் ராஜசேகரின் மகள் ஷிவானி ராஜசேகரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com