விஜய் சேதுபதியின் ’கருப்பனு’க்கு யு சான்றிதழ்

விஜய் சேதுபதியின் ’கருப்பனு’க்கு யு சான்றிதழ்

விஜய் சேதுபதியின் ’கருப்பனு’க்கு யு சான்றிதழ்
Published on

விஜய் சேதுபதி, தன்யா ஜோடியாக நடிக்கும் படம், ’கருப்பன்’. ஸ்ரீ சாய் ராம்  கிரியேஷன்ஸ் சார்பாக ஏ.எம். ரத்னம் தயாரித்துள்ள இந்தப் படத்தை ’ரேணிகுண்டா’ பன்னீர்செல்வம் இயக்கியுள்ளார். டி.இமான் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீஸுக்கு ரெடியாகிவிட்டது. சமீபத்தில் சென்சார் அதிகாரிகள்  இந்தப் படத்தை பார்த்தனர். பின்னர் எந்த கட்டுமின்றில் 'யு' சான்றிதழ் கொடுத்துள்ளனர். 

படம் பற்றி பன்னீர் செல்வம் கூறும்போது,  ’ இது பக்கா கமர்சியல் படம்.  படப்பிடிப்பின்போது, விஜய் சேதுபதியிடம் நிறைய கற்றுக் கொண்டேன். தூங்கும் போது கூட அவர் படம் பற்றிய சிந்தனையில் தான் இருப்பார். ஜல்லிக்கட்டு பற்றிய படமா என்று கேட்கிறார்கள். ஜல்லிக்கட்டு பிரச்னை தொடங்குவதற்கு முன்பே இந்த படம் ஆரம்பிக்கப்பட்டது. ஜல்லிக்கட்டை பற்றி எதையும் படத்தில் பேசவில்லை’ என்றார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com