பாலியல் தொழில்: அமெரிக்காவில் புகார் கொடுத்த தமிழ் நடிகை!
நடிகைகளை அமெரிக்கா அழைத்துச் சென்று, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய தயாரிப்பாளரையும் அவர் மனைவியையும் போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் மீது புகார் கொடுத்தது சென்னையை சேர்ந்த பிரபல நடிகை என்பது தெரிய வந்துள்ளது.
ஐதராபாத்தை சேர்ந்தவர் கிஷன் மொடுகுமுடி என்ற ஸ்ரீராஜ் சென்னுபட்டி (34). இவர் மனைவி சந்திரகலா (31). இருவரும் அமெரிக்காவின் சிகாகோவில் வசித்து வருகின்றனர். கிஷன், அமெரிக்கா செல்லுமுன், சில தெலுங்கு படங்களில் தயாரிப்பு நிர்வாகியாகவும் துணை தயாரிப்பா ளராகவும் இருந்துள்ளார். இதில் ஏற்பட்ட பழக்கத்தை வைத்து, சில இளம் நடிகைகளை அமெரிக்காவுக்குச் சுற்றுலாவுக்காக அழைத்துச் சென் று மிரட்டி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி உள்ளார். தெலுங்கு நிகழ்ச்சிகளுக்காக நடிகைகளை அழைத்தும் இந்தத் தொழிலில் ஈடுபடுத்தியுள் ளார். இவர்களின் வாடிக்கையாளர்கள் அங்கிருக்கும் இந்தியர்கள். அவர்களிடன் மூவாயிரம் டாலர் பெற்றுக்கொண்டு, நடிகைகளுக்கு ஆயிரம் டாலர் கொடுத்துள்ளனர்.
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றுக்காக அமெரிக்கா சென்றிருந்த சென்னை மற்றும் பெங்களூரை சேர்ந்த நடிகைகளை அவர் பாலியல் தொழிலில் ஈடு படுமாறு மிரட்டியுள்ளார். அவர்கள் கொடுத்த புகாரை அடுத்து இலியானாஸ் போலீசார், கிஷன் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அதில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் மீது புகார் கொடுத்த தமிழ் மற்றும் கன்னட நடிகைகள் பிரபலமானவர்கள் என்று கூறப்படுகிறது. ஆனால், அவர்கள் யார் என்பது தெரி யவில்லை. இந்நிலையில் தெலுங்கு திரையுலகினர் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்திய ஸ்ரீரெட்டி, தன்னையும் அந்த தம்பதியினர் அமெரிக்காவுக்கு அழைத்ததாகக் கூறியுள்ளார்.
’அவர்கள் என்னையும் அமெரிக்காவுக்கு அழைத்தனர். வழக்கமாக இங்கு மார்க்கெட் போனால், அமெரிக்கா சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுவார்கள். நடிகைகளின் புகழை வைத்து அவர்களுக்கான ரேட் வித்தியாசப்படும்’ என்று கூறியுள்ளார்.
தெலுங்கு நடிகர் சங்கத் தலைவர் சிவாஜி ராஜா கூறும்போது, ‘கிஷன், இதுபோன்ற வேலையை செய்து வருவது பற்றி எங்களுக்கு சந்தேகம் இருந்தது. இதனால் சிலருக்கு எச்சரிக்கை விடுத்தோம். அவர் நடத்தும் விழாக்களுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தி இருக்கிறோம். இருந்தும் தெரியாமல் சிலர் சிக்கியுள்ளனர். இதுபற்றி வரும் 24-ம் தேதி நடக்கும் சங்கக் கூட்டத்தில் பேச இருக்கிறோம்’ என்றார்.