\
மெர்சல் படத்தில் இணைந்த இரு பாலிவுட் நட்சத்திரங்கள்!

மெர்சல் படத்தில் இணைந்த இரு பாலிவுட் நட்சத்திரங்கள்!

மெர்சல் படத்தில் இணைந்த இரு பாலிவுட் நட்சத்திரங்கள்!
Published on: 

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மெர்சல் படத்தில் ஒரு பாடலை பாலிவுட் பாடகர்களான ஸ்ரேயா கோஷலும், கைலாஷ் கெர்ரும் இணைந்து பாடியுள்ளனர்.

சமந்தா, நித்யாமேனன், காஜல் அகர்வால் ஆகியோர் விஜய்க்கு நாயகியாக நடிக்கும் மெர்சல் படப்பிடிப்பு முடியும் தருவாயில் இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் பாடல் பணிகளில் ஏ.ஆர்.ரஹ்மான் ஈடுபட்டுள்ளார். சமீபத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்காக ஒரு பாடலை பதிவு செய்துள்ளார். அந்தப் பாடலை கைலாஷ் கெர்ருடன் ஸ்ரேயா கோஷல் இணைந்து பாடியுள்ளார். ஹிந்தி, ஆங்கிலத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கைலாஷ் கெர் பாடியிருந்தாலும், அவர் தமிழில் பாடுவது இதுவே முதல்முறை. ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்கூடத்தில் பாடல் பதிவின்போது ஸ்ரேயா கோஷலுடன் எடுத்த புகைப்படத்தை இண்ஸ்ட்ராகிராமில் பதிவிட்டு இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார் கைலாஷ் கெர். இந்தப்பாடல் மெலடி பாடலாக உருவாகியுள்ளதாம்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com