பாலியல் தொழிலில் ஈடுபட்ட நடிகைகள் மீட்பு: இயக்குனர் கைது

பாலியல் தொழிலில் ஈடுபட்ட நடிகைகள் மீட்பு: இயக்குனர் கைது

பாலியல் தொழிலில் ஈடுபட்ட நடிகைகள் மீட்பு: இயக்குனர் கைது
Published on

இரண்டு நடிகைகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சினிமா காஸ்டிங் இயக்குனரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஐதராபாத்தில் உள்ள பஞ்சரா ஹில்ஸ் பகுதியில் நட்சத்திர ஓட்டல்களில் பாலியல் தொழில் நடப்பதாக வந்த தகவலை அடுத்து போலீசார் திடீர் ரெய்டு நடத்தினர். அப்போது அத்தொழிலில் பெண்களை ஈடுபடுத்திய மோனீஷ் கடகியா (56), வெங்கட் ராவ் (40) ஆகியோரை கைது செய்தனர். இதில் மோனீஷ், தமிழ், தெலுங்கு, இந்தி சினிமாக்களில் காஸ்டிங் இயக்குனராக பணியாற்றியுள்ளார். மற்றும் இந்தி சினிமா நிகழ்ச்சி ஏற்பட்டாளராகவும் உள்ளார். இவர்களிடமிருந்து 3 செல்போன்கள், 55 ஆயிரம் ரொக்கம், ஒரு சொகுசு கார் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.

இதுபற்றி துணை போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ண ராவ் கூறும்போது, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட இரண்டு பெண்களை மீட்டுள்ளோம். அவர்களில் ஒருவர் ரிச்சா சக்ஸேனா (24). மும்பையை சேர்ந்தவர். தெலுங்கு சினிமாவில் நடித்துவருகிறார். மற்றொருவர் சுப்ரா சட்டர்ஜி (20). மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர். அவர் பெங்கால் படங்கள் மற்றும் டிவி தொடர்களில் நடித்து வருபவர்’ என்றார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com