டிவிட்டரில் ட்ரென்டாகும் தல பர்த் டே

டிவிட்டரில் ட்ரென்டாகும் தல பர்த் டே
டிவிட்டரில் ட்ரென்டாகும் தல பர்த் டே

அஜீத் குமார் பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் டிவிட்டரில் உருவாக்கியுள்ள ஹேஷ்டாக் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் இருந்து வருகிறது.

விவேகம் படத்தின் ஷூட்டிங் செர்பியாவில் நடந்துவருகிறது. அஜீத், அங்கு தனது பிறந்த தினத்தைக் கொண்டாடுகிறார். இந்நிலையில் அவருக்கு திரைத்துறையினரும் ரசிகர்களும் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். நடிகர் கயல் சந்திரன் தனது டிவிட்டர் பக்கத்தில், ’பல மில்லியன் பேருக்கு இன்ஸ்பிரேசனாக அஜீத் இருக்கிறார். அத்தனை பேரும் இன்று பெருமை கொள்கிறோம். காரணம் அஜீத் மட்டுமே’ எனத் தெரிவித்துள்ளார். நடிகை பியா, வாழ்த்துகள் அஜீத் சார். நீண்டகாலம் மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறேன் எனத் தெரிவித்துள்ளார். நகைச்சுவை நடிகர் யோகிபாபு , ’ அஜீத்துடன் வீரம், வேதாளம் படங்களில் நடிக்க வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததற்கு இயக்குநர் சிவா அண்ணா. விவேகம் படத்திற்கு ஏன் கூப்பிடவில்லை?’ எனத் தெரிவித்து இருக்கிறார்.

நடிகர் மோகன் ராமனின் வாழ்த்துச்செய்தியில், மகிழ்ச்சியுடனும், நலமுடனும் வாழ வாழ்த்துகள். இறைவனின் அருள் கிடைக்கட்டும் என தெரிவித்து உள்ளார்.

நடிகர் சாந்தனு வீடியோ பதிவுடன் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அதில், தல அஜீத் தான் அனைவருக்கும் உண்மையான இன்ஸ்பிரசன். அவர் தன்னை ஸ்டாராக உருவாக்கிக் கொண்டார் எனத் தெரிவித்துள்ளார். நடிகை பார்வதி நாயர், சவுந்தரராஜா உட்பட ஏராளமான நடிகர், நடிகைகள் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

#HBDBelovedThalaAjith என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள ஹேஷ்டாக்கில் 6, லட்சத்து 61 ஆயிரம் பேர் காலை 9.30 மணி வரை டிவிட் செய்துள்ளனர். தற்போது வரை இந்த ஹேஷ்டாக் முதலிடத்தில் இருந்து வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com