ரஜினிக்கு ஆதரவாகவும் எதிராகவும் ட்ரெண்டாகும் ஹேஸ்டேக்குகள்!

ரஜினிக்கு ஆதரவாகவும் எதிராகவும் ட்ரெண்டாகும் ஹேஸ்டேக்குகள்!

ரஜினிக்கு ஆதரவாகவும் எதிராகவும் ட்ரெண்டாகும் ஹேஸ்டேக்குகள்!
Published on

 ட்விட்டரில் ரஜினிக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்

குடியு‌ரிமை திருத்தத் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்க‌ள் நடைபெற்று வருகின்றன. கல்லூரி மாணவர்கள், பல்வேறு அமைப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பலரும் குடியு‌ரிமை திருத்தத் சட்டத்திற்கு எதிராகவும், ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட கருத்து பேசுபொருளாகியுள்ளது.

அதில், “எந்த பிரச்னைக்கும் தீர்வு காண வன்முறையும், கலவரமும் ஒரு வழி ஆகிவிடக் கூடாது. தேசப்பாதுகாப்பையும் நாட்டு நலனையும் மனதில் கொண்டு இந்திய மக்கள் ஒற்றுமையுடனும், விழிப்புடனும் இருக்க வேண்டும். தற்போதைய வன்முறைகள், மனதுக்கு மிகவும் வேதனை அளிக்கிறது” என ரஜினிகாந்த் பதிவிட்டார்.

ரஜினிகாந்தின் இந்த கருத்துக்கு சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. அடக்குமுறையையும், ஒடுக்குமுறையையும் மீறி போராடும் மாணவர்களை இதைவிட யாராலும் கொச்சைப்படுத்த முடியாது என்றும் ரஜினியின் பதிவு குறித்து சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ட்விட்டரில் ரஜினிக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். #IStandWithRajinikanth, #ShameOnYouSanghiRajini ஆகிய ஹேஸ்டேக்குகள் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com