\
விஜய் சேதுபதியின் ’துக்ளக் தர்பார்’ டீசர் வெளியீடு!

விஜய் சேதுபதியின் ’துக்ளக் தர்பார்’ டீசர் வெளியீடு!

விஜய் சேதுபதியின் ’துக்ளக் தர்பார்’ டீசர் வெளியீடு!
Published on

விஜய் சேதுபதியின் ‘துக்ளக் தர்பா’ர் படத்தின் டீசர் இன்று வெளியாகியிருக்கிறது.

அறிமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் முழுக்க முழுக்க அரசியல் படமாக உருவாகி வரும் இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடித்திருக்கிறார். பார்த்திபன், மஞ்சிமா மோகன், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.‘96’ பட புகழ் கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.

சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியிருந்த நிலையில், இன்று டீசர் வெளியாகியிருக்கிறது. பார்த்திபன் அரசியல்வாதியாகவும், அவரின் அடியாளாகவும் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். அடியாள் எப்படி அரசியல்வாதியாக மாறுகிறார் என்பதை டீசர் உணர்த்துகிறது. அதில், ‘எவனோ ஒருத்தன் என்கூட இருக்கான். என்னை யூஸ் பண்றான். நல்லா வச்சி செய்றான் என்னை” என்று பார்த்திபனுடன் பேசும் வசனம் அரசியல் நையாண்டியுடன் கவனம் ஈர்க்கிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com