\
டூப் இல்லாமல் த்ரிஷா போட்ட ஃபைட்

டூப் இல்லாமல் த்ரிஷா போட்ட ஃபைட்

டூப் இல்லாமல் த்ரிஷா போட்ட ஃபைட்
Published on

த்ரிஷா நடித்துள்ள படம்,‘கர்ஜனை’. செஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பில் ஜோன்ஸ் தயாரிக்கிறார். சுந்தர் பாலு இயக்கியுள்ளார். வம்சி கிருஷ்ணா, வடிவுக்கரசி, தவசி, ஆரியன், அமித் உட்பட பலர் நடித்துள்ளனர். அம்ரிஷ் இசை அமைத்துள்ளார். சிட்டி பாபு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

’என்.ஹெச்.10’ என்ற இந்திப் படத்தை தழுவி எடுக்கப்படும் படம் இது.

படம் பற்றி சுந்தர் பாலு கூறும்போது, ‘இந்தப் படத்தின் கதைக்களமும், திரைக்கதையும் த்ரிஷாவிற்கு மிகவும் பிடித்தது. கதையை கேட்டதும் படத்தில் நடிக்கச் சம்மதித்தார். ஐந்து நண்பர்கள் ஒன்றாகச் சேர்ந்து இளம் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கின்றனர். அதை படமாக்கி சமூக வலைத்தளங்களில் விற்கிறார்கள். இந்நிலையில், காதலிக்க மறுத்த பெண்ணை, தன் நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்கிறார்கள். இதன் பின்னணியில் நடக்கும் கதையை, ஆக்‌ஷன் திரில்லருடன் படமாக்கி இருக்கிறேன். உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் மாறுபட்ட கோணத்தில் த்ரிஷா நடித்திருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் டூப் போடாமல் த்ரிஷா நடித்துள்ளார். மே மாதம் இறுதியில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம் ’என்றார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com