\
த்ரிஷாவின் ட்விட்டர் கணக்கு முடக்கம்

த்ரிஷாவின் ட்விட்டர் கணக்கு முடக்கம்

த்ரிஷாவின் ட்விட்டர் கணக்கு முடக்கம்
Published on

பீட்டா அமைப்புக்கு ஆதரவாக தனது கணக்கினை முடக்கி அடையாளம் தெரியாத நபர் கருத்து பதிவிட்டதாக நடிகை த்ரிஷா புகார் தெரிவித்துள்ளார்.

பீட்டா அமைப்புக்கு ஆதரவாக நடிகை த்ரிஷா கருத்து கூறிவருவதாக அவருக்கு எதிராக கண்டனக்குரல்கள் எழுந்தன. இதையடுத்து காரைக்குடி அருகே அவர் நடித்து வந்த படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டது. இதற்காக த்ரிஷா தரப்பிலும் கருத்து தெரிவிக்கப்பட்டது. அவருக்கு ஆதரவாக நடிகர் கமல்ஹாசனும் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இந்தநிலையில், பீட்டா அமைப்புக்கு ஆதரவாக தனது ட்விட்டர் கணக்கை முடக்கி அடையாளம் தெரியாத நபர் பதிவிட்டதாக நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக புகாரும் அளிக்கப்பட்டுள்ளதாக த்ரிஷா கூறியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com