\
இன்ஸ்டாகிராமில் த்ரிஷாவின் திடீர் அதிரடி : ரசிகர்கள் குழப்பம்..!

இன்ஸ்டாகிராமில் த்ரிஷாவின் திடீர் அதிரடி : ரசிகர்கள் குழப்பம்..!

இன்ஸ்டாகிராமில் த்ரிஷாவின் திடீர் அதிரடி : ரசிகர்கள் குழப்பம்..!
Published on

இன்ஸ்டாகிராமில் இருந்த தனது பழைய புகைப்படங்கள் மற்றும் பதிவுகளை நடிகை த்ரிஷ் திடீரென நீக்கியுள்ளார்.

தமிழ் உட்பட தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக திகழ்பவர் த்ரிஷா. 15 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் இவரது படங்களுக்கு இன்னமும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருக்கிறது.

தற்போது கூட சில படங்களில் ஒப்பந்தமாகியிருக்கும் த்ரிஷா, கொரோனா பொதுமுடக்க காலத்தில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக செயல்பட்டார். பல்வேறு விஷயங்களை தனது ரசிகர்களுக்கு அவர் பகிர்ந்து வந்தார். கடந்த ஜூன் மாதம் சமூக வலைத்தளங்களில் இருந்து தற்காலிகமாக விலகிய இவர், சில வாரங்களுக்கு முன்பிருந்து மீண்டும் செயல்பட தொடங்கினார்.

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து பழைய புகைப்படங்கள் மற்றும் பதிவுகள் அனைத்தையும் அவர் நீக்கியுள்ளார். தற்போது வெறும் 7 புகைப்பட பதிவுகள் மட்டும் த்ரிஷாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ளன. அவரது இந்த திடீர் அதிரடி முடிவிற்கு காரணம் என்ன ? என்று ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com