“கொரோனாவுக்கு மாநிலம், இனம், மொழி, வயதுலாம் தெரியாது” - த்ரிஷா ஏற்படுத்திய விழிப்புணர்வு

“கொரோனாவுக்கு மாநிலம், இனம், மொழி, வயதுலாம் தெரியாது” - த்ரிஷா ஏற்படுத்திய விழிப்புணர்வு
“கொரோனாவுக்கு மாநிலம், இனம், மொழி, வயதுலாம் தெரியாது” - த்ரிஷா ஏற்படுத்திய விழிப்புணர்வு

கொரோனா வைரஸ் யாரை வேண்டுமானாலும் தாக்கும் என நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார்.

சீனாவின் வூஹான் மாகாணத்தில் உருவான கொரோனா வைரஸால் சுமார் 190 நாடுகளில் இயல்பு நிலைமை முடங்கியுள்ளது. இதுவரை சுமார் 4 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா,‌ ஈரான், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளாலேயே இந்நோயைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறுவதால் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

இந்தியாவை பொருத்தவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 649 ஆக அதிகரித்துள்ளது. இதனால் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கூட்டம் கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சென்னை உட்பட தமிழகம் முழுவதும் உள்ள வணிக வளாகங்கள், தியேட்டர்கள், கல்வி நிலையங்கள், பெரிய கடைகள் மூடப்பட்டுள்ளன. ஆனால் மக்களின் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்ய சிறிய மளிகை கடைகள், காய்கறி கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. ஆனால் சமூக விலகலை கடைபிடிக்க மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சமூக விலகல் குறித்தும் வீட்டில் இருக்க வேண்டிய அவசியம் குறித்தும் பிரபலங்கள் விழிப்புணர்வு வீடியோக்கள் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், நடிகை த்ரிஷா ஏன் வீட்டில் தங்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில், “கொரோனா வைரஸ் யாரை வேண்டுமானாலும் தாக்கும். நீங்கள் எந்த மாநிலம், எந்த மொழி பேசுகிறீர்கள், என்ன கலரில் உள்ளீர்கள் என்பன போன்ற எந்த விஷயமும் தெரியாது. கொரோனா வைரஸ் குறிப்பிட்ட மக்கள் , இனங்கள், மாநிலங்களை குறிவைக்காது. அதேபோல், நீங்கள் எப்படி இருக்கிறீர்கள், உங்கள் வயது எவ்வளவு, நீங்கள் எங்கு வாழ்கிறீர்கள், நீங்கள் என்ன மொழி பேசுகிறீர்கள் என்பதை பற்றியெல்லாம் அதற்கு கவலையில்லை. இவற்றை தடுக்க 21 நாட்கள் வீட்டில் இருப்பது மிகவும் அவசியம். ஆனால் இவ்வளவு நாட்கள் வீட்டிலேயே இருப்பது லேசானது இல்லை என்பது எனக்கு தெரியும். நம்மை பாதுகாத்துக்கொள்ள இதை செய்துதான் ஆக வேண்டும். எனவே தயவுசெய்து வீட்டில் இருங்கள்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com