மேரிகோம் வாழ்க்கை வரலாற்று படத்தில் த்ரிஷா!

மேரிகோம் வாழ்க்கை வரலாற்று படத்தில் த்ரிஷா!

மேரிகோம் வாழ்க்கை வரலாற்று படத்தில் த்ரிஷா!
Published on

திரையுலகில் அடுத்த வேட்டையை அழுத்தமாக திடங்கி இருக்கிறார் த்ரிஷா. தற்போது அவரது கையில் சாமி-2, சதுரங்கவேட்டை 2, மோஹினி, 96 உள்ளிட்ட 8 படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் சில படங்களிலும் நடித்து வருகிறார்.

திரிஷாவின் படங்களில் நான்கு படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது. இந்த நிலையில்தான் த்ரிஷா பாக்ஸிங் கற்றுக்கொள்ளும் வீடியோ க்ளிப்பிங்ஸ் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

தான் அடுத்து நடிக்க உள்ள ஒரு தமிழ் படத்தில் பாக்ஸராக நடிப்பதற்காக அவர் இந்தப்பயிற்சியை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறாராம். 

பாக்ஸிங் வீராங்கனையான மேரிகோம் வாழ்க்கையை மையப்படுத்திய ஹிந்தி படத்தில் ப்ரியங்கா சோப்ரா நடித்திருந்தார். அந்தப்படத்திற்கு அங்கு மாபெரும் வெற்றி கிடைத்தது. தற்போது அந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கில் த்ரிஷா நடிக்க இருக்கிறாராம் . நிஜ குத்துச்சண்டை வீராங்கனையாக பிரதிபலிக்க வேண்டும் என்கிற ஆவலில் த்ரிஷா குத்துச்சண்டை பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். இந்தப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com