\
கிராஃபிக்ஸ் பேயான த்ரிஷா

கிராஃபிக்ஸ் பேயான த்ரிஷா

கிராஃபிக்ஸ் பேயான த்ரிஷா
Published on: 

பல படங்களில் பிஸியாக நடித்து வரும் த்ரிஷா, மாதேஷ் இயக்கும் மோகினி படத்திலும் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் கிராஃபிக்ஸ் காட்சிகள் மட்டுமே 70 நிமிடம் இடம் பெறுகிறதாம். 
இந்தப் படத்தின் சில காட்சிகளை விநியோகஸ்தர்களுக்கு திரையிட்டுக் காட்டியிருக்கிறார் மாதேஷ். இது குறித்து அவர் பேசுகையில், மோகினி படத்தின் சில காட்சிகளை விநியோகஸ்தர்களுக்கு திரையிட்டுக் காட்டினோம். இன்னும் சில பணிகள் இருப்பதால் முழுப் படத்தையும் அவர்களுக்கு காட்ட இயலவில்லை. ஆனாலும் அவர்கள் மிகவும் பாராட்டினர். போஸ்ட் ப்ரடெக்சன் பணிகள் முழு வேகத்தில் நடைபெற்று வருகிறது. 
கிராஃபிக்ஸ் காட்சிகள் அதிகம் இடம்பெறுவதால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்படுகிறது. கிராஃபிக்ஸ் காட்சிகள் மட்டும் 70 நிமிடம் இடம் பெறும். விஷுவல் எஃபெக்ட்  பணிகள் அனைத்தும் முடிந்து விட்டது. விரைவில் ரிலீஸ் தேதியை முடிவு செய்ய இருக்கிறோம். அடுத்த மாதம் ஆடியோ ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருக்கிறோம் என்கிறார். த்ரிஷா நடிக்கும் பேய் படம் இது.  

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com