தனுஷின் ‘மாரி2’வில் மலையாள நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பாலாஜி மோகன் இயக்கத்தில் 2015 ஆண்டு வெளியான திரைப்படம் ‘மாரி’. அந்தப் படத்தில் தனுஷ் ஏரியா தாதாவாக நடித்திருந்தார். அதில் இடம்பெற்றிருந்த ’செஞ்சிருவேன்’ டயலாக் தனித்த அடையாளத்தை ஏற்படுத்தியிருந்தது. முதல் பாகத்தில் காஜல் அகர்வால் நடித்திருந்தார். இதன் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார் இயக்குநர். இதில் மலையாள புகழ் சாய் பல்லவி கதாநாயகியா நடித்து வருகிறார். இந்தப் படத்தில் இப்போது மலையாள நடிகர் டொவினோ தாமஸ் இணைய உள்ளதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். மேலும் ‘அற்புதமான குழுவுடன் இணைந்திருப்பது மிகப்பெரிய அனுபவமாக உள்ளது’ என குறிப்பிட்டுள்ளார். இதன் இயக்குநர் பாலாஜிமோகன் ‘மகிழ்ச்சியான உள்ளது ப்ரோ.. உங்களுடன் சேர்ந்து ஷூட்டிங் செய்வது’ என குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில் தொலைக்காட்சி தொகுப்பாளி டிடி உடன் இணைந்து பாடல் ஒன்றில் டொவினோ தாமஸ் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அந்தப் பாடல் யுடியூப்பில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது.