”இது ரஜினி ஸ்டைல்”... சூப்பர் ஸ்டாரின் பஞ்ச் வசனங்கள்.!
’பஞ்ச்’ என்றால் அதில் ஆல் டைம் ஃபேவரைட் பாட்ஷா படத்தில் வரும் இந்த வசனம்தான்...
"ஒரு தடவை சொன்னா 100 தடவை சொன்ன மாதிரி"
படத்தில் இந்த வசனம் வரும் இடம்.. அதை சொல்லும்போது ரஜினிகாந்த் கை விரலை சுழற்றும் விதம், விரலை சுழற்றும்போது வரும் சத்தம் எல்லாம், அவரை சூப்பர் ஹீரோ ரேஞ்சுக்கு கொண்டு செல்லும்..
அதே படத்தில் வரும் மற்றொரு பஞ்ச் வசனமும் பிரபலம்.. ஆனால், இதில் கொஞ்சம் தத்துவம் அடங்கியிருக்கும்..
”கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான் ஆனா கைவிட்டுடுவான்.. நல்லவங்கள நிறைய சோதிப்பான் ஆனா கைவிடமாட்டான்”
பஞ்ச் வசனத்தை வெறும் ஹீரோயிசத்துக்காக மட்டுமே ரஜினி பயன்படுத்தமாட்டார். அவர் அதில் சில செய்திகளையும் கூறுவார். அப்படியொரு வசனமதான் இது..
”எப்போ வருவேன் எப்படிவருவேன்னு யாருக்கும் தெரியாது.. வர வேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்”
அன்றைய காலத்தில் ரஜினிகாந்த் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வரப்போவதாக செய்திகள் பரவி பரபரப்பை ஏற்படுத்து. அதற்கு பதிலளிக்கும் விதமாக இதுபோன்ற பஞ்ச் வசனங்கள் ரஜினியின் படங்களில் இடம்பெறும்.
இந்த வரிசையில் மற்றொரு முக்கியமான பஞ்ச் வசனம்தான்.. ”என் வழி தனி வழி”
ரஜினியின் கதையில், அவரின் தயாரிப்பிலேயே உருவான படையப்பா படத்தில் இந்த பஞ்ச் வசனம் மிகவும் பிரபலம். இதுபோன்ற வசனங்கள் அரசியலோடு தொடர்புபடுத்தி பேசப்பட்டதும் உண்டு.. பதினாறு வயதிலே படத்தில் வரும் ”இது எப்படி இருக்கு”.. முள்ளும் மலரும் படத்தில் வரும் ”கெட்ட பய சார் இந்த காளி”.. ”ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் முடிக்குறான்”.. என நினைத்து நினைத்து ரசிக்கும் அளவுக்கு பெரிய பட்டியலே உள்ளது. 40 வருடங்கள் கடந்தபின்னரும் அந்த வசனங்கள் எல்லாம் இன்றும் இளைஞர்களிடயே புழக்கத்தில் உள்ளது. அதுதான், எழுதிய எழுத்தாளருக்கும், பேசிய ரஜினிக்கும் கிடைத்த வெற்றி..

