பாலிவுட் பிரபலங்களின் கார் எண்களின் ரகசியம்...

பாலிவுட் பிரபலங்களின் கார் எண்களின் ரகசியம்...

பாலிவுட் பிரபலங்களின் கார் எண்களின் ரகசியம்...
Published on

அமிதாப் பச்சன்
இவருடைய கார்கள் இவர் பிறந்த தேதியான 11-ன் கூட்டுத் தொகையை குறிக்கும் விதத்தில் 2 என்ற பதிவு எண் கொண்டதாக இருக்கும். அத்துடன், சில கார்களில் அவரை பிக் பி என்று அழைப்பதன் அடையாளமாக BB என்ற வரிசை எழுத்துக்களையும் கொண்டிருப்பதையும் காண முடிகிறது.

ஷாகீத் கபூர்
இவரது பிறந்த நாள் பிப்ரவரி 25-ன் இதன் கூட்டுத் தொகையான ஏழாம் எண்ணை அதிர்ஷ்டமாக கருதுகிறார் இந்த பாலிவுட் நாயகன். இவரது ரேஞ்ச்ரோவர் எஸ்யூவி, ஹார்லி டேவிட்சன் பைக் என அனைத்தும் 700 என்ற பதிவெண்ணை கொண்டிருக்கிறது.

சஞ்சய் தத்
சர்ச்சை நாயகன் சஞ்சய் தத். இவர் சொகுசு கார்கள் மீது தீராக் காதல் கொண்டவர். 4545 என்ற பதிவெண்களையே அனைத்து கார்களுக்கும் வாங்கி பயன்படுத்துகிறார். அவரது மனைவி மான்யாட்டாவுக்கு பரிசளித்த ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் காருக்கும் இதே பதிவெண்ணை வாங்கி கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சயீப் அலிகான் 
பாலிவுடின் முன்னணி நடிகர் சயீப் அலிகான் தனது பிறந்த நாள் எண்ணை குறிப்பிடும் வகையில், 1970 என்ற எண்ணை பயன்படுத்துகிறார். அதுவும் அவரது பிறந்த தினமான 16ம் தேதியின் கூட்டு எண்ணான 7 என்பது வருமாறும் அவர் பார்த்துக் கொள்கிறார்.

ரீத்தேஷ் தேஷ்முக் 
அடிப்படையில் அரசியல் குடும்ப பின்னணி கொண்ட நடிகர் ரீத்தேஷ் தேஷ்முக். இவரது அனைத்து வாகனங்களுக்கும் ஒன்றை பதிவு எண்ணாக பெற்று வருகிறார். ஒன்று மட்டுமல்ல, அவரது பெயரின் முதல் ஆங்கில எழுத்தான R என்பதை குறிக்கும் வகையில், R 1 என்ற பதிவெண்ணை பயன்படுத்துகிறார்.

ரன்பீர் கபூர்
சீனா உள்ளிட்ட பல நாடுகளில் 8 என்ற எண் அதிர்ஷ்டமானதாக கருதப்படுகிறது. ஆனால், இந்தியர்களை பொருத்தவரை 8ம் எண் ராசியில்லாதது. பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் தனது அனைத்து கார்களுக்கும் 8ம் நம்பரையே தேர்வு செய்து வாங்கியிருக்கிறார். அது ராசியானதாக கருதுகிறாரா அல்லது 8ம் எண் மீதுள்ள மூட நம்பிக்கையை உடைக்கும் விதமாக பயன்படுத்துகிறாரா என்பது அவருக்கே வெளிச்சம்.

ஷாரூக்கான் 
ஷாருக் தனக்கு ராசியாக கருதும் எண் 555. தனது அனைத்து கார்களின் பதிவெண்களையும் 555 என்று வருமாறு பார்த்துக் கொள்கிறார். இந்த பாலிவுட் பாதுஷா.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com