தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்கு இணையாக ஹீரோயின்களுக்கும் சம்பளம் வேண்டும் என்ற குரல் பல வருடங்களாக ஒலித்து வந்ததது. கடந்த சில வருடங்களாக டாப் ஹீரோக்களின் சம்பள லெவலுக்கு இல்லை என்றாலும் சுமார் நான்கு கோடி, மூன்று கோடி என்று சம்பளம் கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள் தமிழ் ஹீரோயின்கள். அதில் டாப்பில் இருப்பவர் நயன்தாரா. அடுத்து இரண்டு கோடி ரூபாய் வரை சில முன்னணி ஹீரோயின்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் இந்தி நடிகைகளின் சம்பளம் நன்றாகவே உயர்ந்திருக்கிறது. அவர்களின் சொத்து மதிப்பையும் சம்பள விவரத்தையும் பாலிவுட் இணையதளம் ஒன்று வெளியிட்டிருக்கிறது.
(மாதுரி தீக்ஷித்)
விவரம் இங்கே:
தீபிகா படுகோன்:
இந்தி சினிமாவின் டாப் ஹீரோயின். இவரை கால்ஷீட்டை பிடிப்பதுதான் இந்தி ஹீரோக்களுக்கு சவாலாக இருக்கிறது. ரன்வீர் சிங்கை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்கிற தகவல்கள் வந்துகொண்டிருக்கிறது. தீபிகா ஒரு படத்துக்கு வாங்கும் சம்பளம் ரூ.15 கோடி. விளம்பர படங்களுக்கு ரூ.8 கோடி. இவரது சொத்து மதிப்பு 317 கோடி ரூபாய்!
பிரியங்கா சோப்ரா:
இந்தியில் இருந்து பாலிவுட்டுக்குச் சென்றாலும் சொத்து மதிப்பில் தீபிகாவை விட, பின்னால்தான் இருக்கிறார் பிரியங்கா. படத்தில் நடிப்பதற்கான சம்பளம் ரூ.12 கோடி. விளம்பர படங்களுக்கு ரூ.5 கோடி வாங்குகிறார். இவரது சொத்து மதிப்பு 285 கோடி ரூபாய்.
ஐஸ்வர்யா ராய்:
முன்னாள் தேவதை. தமிழ், தெலுங்கு, இந்தி, பெங்காலி, ஆங்கிலம் என ரவுண்ட் கட்டி நடித்தவர். இப்போது ஒரு படத்துக்கு ரூ.10 கோடி கேட்கி றார். சொத்து மதிப்பு, ரூ.245 கோடி.
மாதுரி தீக்ஷித்:
ஒரு காலத்தில் அதிக சம்பளம் வாங்கிய ஹீரோயினான மாதுரி இப்போது ஒரு படத்துக்கு நான்கு கோடி வரை வாங்குகிறார். சொத்து மதிப்பு, ரூ.246 கோடியாம்!
பிரீத்தி ஜிந்தா:
படங்களில் இப்போது நடிக்கவில்லை என்றாலும் பல நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார். இவரது சொத்து மதிப்பு, ரூ.211 கோடியாக உயர்ந்திருக்கிறது.
வித்யா பாலன்:
ஒரு படத்துக்கு ரூ.6-ல் இருந்து 7 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். இவரது சொத்து மதிப்பு, 190 கோடி ரூபாய்.
அனுஷ்கா சர்மா:
இந்திய கிரிக்கெட் கேப்டன் விராத் கோலியின் மனைவி. கிளீன் சிலேட் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்துகிறார். ஒரு படத்துக்கு ரூ.7 கோடியில் இருந்து 9 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். சொத்து மதிப்பு, ரூ.176 கோடி!
சோனாக்ஷி சின்ஹா:
சத்ருஹன் சின்ஹாவின் மகள். ரஜினிக்கு ஜோடியாக ’லிங்கா’வில் நடித்த இந்தி ஹீரோயின். ஒரு படத்துக்கு ரூ. 4 கோடியில் இருந்து 6 கோடி வரை வாங்குகிறார். சொத்து மதிப்பு, ரூ.105 கோடி!
கங்கனா:
தமிழில் ‘தாம் தூம்’ -ல் நடித்த இந்தி ஹீரோயின். ஒரு படத்துக்கு ரூ.11 கோடி சம்பளம் வாங்கும் கங்கனாவின் சொத்து மதிப்பு, ரூ.75 கோடி!