சீரிஸ் ஆக உருவாகும் `Tomb Raider'... லாராவாக நடிப்பது யார் தெரியுமா? |Tomb Raider Web Series
உலகம் முழுக்க புகழ்பெற்ற வீடியோ கேம் `Tomb Raider', தற்போது லைவ் ஆக்ஷன் சீரிஸாக உருவாக இருக்கிறது. 90களில் இருந்து ஆக்ஷன் அட்வென்சர் வீடியோ கேமாக புகழ்பெற்ற இதனை ஹாலிவுட் படமாகவும் மாற்றியது. Simon West இயக்கி ஏஞ்சலினா ஜோலி நடித்த `Lara Croft: Tomb Raider' படம் 2001ல் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதன் சீக்குவலாக `Lara Croft: Tomb Raider – The Cradle of Life' 2003ல் வெளியானது. 2018ல் மீண்டும் இப்படத்தை ரீபூட் செய்து இயக்கினார்கள் ஆனால் அப்படம் பெரிய வெற்றி பெறவில்லை.
தற்போது `Tomb Raider' சீரிஸாக உருவாக்க இருக்கிறது. மிகவும் பாராட்டப்பட Shōgun சீரிஸின் இயக்குநர்களில் ஒருவரான Jonathan Van Tulleken இந்த சீரிஸை இயக்க உள்ளார். சீரிஸில் முதன்மை கதாப்பாத்திரம் லாரா கிராஃப்ட்டாக நடிக்க இருப்பது சோஃபியா டுனர். உலகப்புகழ் பெற்ற `கேம் ஆஃப் த்ரோன்ஸ்' தொடரில் சான்ஸா ஸ்டார்க் ஆக நடித்து பிரபலமானவர் சோஃபியா. 2026 ஜனவரி இரண்டாம் வாரத்தில் இந்த சீரிஸின் படப்பிடிப்பு துவங்க உள்ளது.
இந்த தொடரில் முதன்மை பாத்திரத்தில் நடிப்பது பற்றி சோஃபியா டுனர் கூறும் போது "லாரா கிராஃப்ட் கதாப்பாத்திரத்தில் நடிப்பது மிக த்ரில்லிங்கான ஒன்றாக இருக்கிறது. அது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கதாப்பாத்திரம். என்னால் முடிந்த எல்லாவற்றையும் இந்தப் பாத்திரத்திற்காக செய்வேன். ஏஞ்சலினா, அலிசா போன்றோர் பிரமாதமாக நடித்த பாத்திரத்தை அதற்கு சமமான அளவில் செய்வது சிரமமான ஒன்றே. ஆனால் எல்லாம் ஒரு பாதுகாப்பான கரங்களில் தான் இருக்கிறது என்ற உறுதி உள்ளது. நாங்கள் செய்து கொண்டிருப்பதை உங்களுக்கு காட்ட ஆவலோடு காத்திருக்கிறேன்" எனக் கூறி இருக்கிறார். பிரம்மாண்டமாக தயாராகவுள்ள இந்த சீரிஸ் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.