சினிமா
இன்று உலகப் புத்தக தினம்: தமன்னா பரிந்துரைத்த புத்தகம் எது?
இன்று உலகப் புத்தக தினம்: தமன்னா பரிந்துரைத்த புத்தகம் எது?
நடிகை தமன்னா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புத்தகத்தை பரிந்துரை செய்துள்ளார்.
உலகம் முழுவதும் இன்று புத்தகத்தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. படிக்கும் பழக்கம் அதிகம் இல்லாத நாடு இந்தியா. ஒரு எழுத்தாளரின் புதிய நூல் நூற்றுக்கணக்கில் விற்றாலே அது பெரும் சாதனைதான். உலக அளவில் கோடிக் கணக்கில் புத்தகங்கள் விற்பனையாகின்றன. ஆனால் தமிழ் நூல்களின் விற்பனை என்பது அந்த அளவுக்கு இல்லை. இந்நிலையில் நடிகை தமன்னா நூல் ஒன்றை பரிந்துரை செய்துள்ளார். “புத்தங்கள் தான் வாழ்க்கையின் சிறந்த நண்பன். நம் வாழ்நாள் முழுக்கவே கூடவே பயணிக்கக்கூடியவை. இன்று உலகப் புத்தகத் தினம். நான் இந்த நூலை பரிந்துரை செய்வதில் மகிழ்ச்சியடைகிறேன். விரைவில் வர உள்ள பேயல் கிட்வானியின் ‘ஓன் த பம்ப்’ நூலை வாங்கிப் படியுங்கள்” என்று அந்த வீடியோ பதிவில் குறிப்பிட்டுள்ளார்.