ஹாப்பி பர்த் டே த்ரிஷா

ஹாப்பி பர்த் டே த்ரிஷா

ஹாப்பி பர்த் டே த்ரிஷா
Published on

தமிழ், தெலுங்கு, இந்தி என இரண்டு மொழிகளிலும் நடித்து அசத்தி வரும் த்ரிஷாவுக்கு இன்று பிறந்த நாள். 12 வருட சினிமா வாழ்க்கையை கடந்து வந்துள்ள த்ரிஷா தமிழில் சாமி, கில்லி, லேசா லேசா, திருப்பாச்சி, ஆறு, கிரீடம், குருவி, மன்மதன் அம்பு, மங்காத்தாபோன்ற ஹிட் படங்களை கொடுத்ததுடன் பல முன்னணி ஹீரோக்களுடனும் நடித்துள்ளார். திரைப்படங்களில் நடிக்கத் துவங்கும் முன் சென்னை அழகியாக 1999ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த ‘மிஸ் மெட்ராஸ்’பட்டமே திரையுலகிற்கு அவரை இழுத்தது. அதன்பின் அதே ஆண்டில் ‘ஜோடி’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் கதாநாயகி சிம்ரன். அவருக்கு தோழியாக நடித்தார். அதன் பிறகு 2 வருடங்கள் கழித்து மவுனம் பேசியதே படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தார்.

ரொமாண்டிக் ஹீரோயின் ஆக தொடங்கி முன்னணி நடிகையாக திகழ்ந்து தற்போது மோகினியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது பேய் படங்களிலே பெரிதும் நடித்து வருகிறார் த்ரிஷா. இளம் கதாநாயகியாக திரையில் தோன்றி விஜய், அஜித், விக்ரம், சூர்யா, அஜீத், விஷால், ஆர்யா, ஜெயம் ரவி போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து விட்டார். இவர் இன்று தனது 35 வது பிறந்தநாளை நியூயார்க்கில் தனது தோழிகளுடன் கொண்டாடி வருகிறார். இவருக்கு சினிமாவை விட மிகவும் பிடித்தது நாய் என்றே கூறலாம். ஆதரவற்ற நாய்களை எடுத்து வளர்ப்பது, சாலைகளில் உள்ள நாய்களை பாதுகாப்பது என்பதே இவருடைய பொழுதுபோக்கு. பீட்டா அமைப்பின் தூதராகவும் இவர் உள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com