நச்சுனு நாலு சினிமா செய்தி... உங்களுக்காகவே..!

நச்சுனு நாலு சினிமா செய்தி... உங்களுக்காகவே..!
நச்சுனு நாலு சினிமா செய்தி... உங்களுக்காகவே..!

ஒரே டென்ஷனா ஓடிட்டு இருக்கீங்களா..? கொஞ்ச நேரம் கூலாகுங்க... உங்களுக்காகவே நச்சென நாலு சினிமா நியூஸ கொண்டுவந்திருக்கிறோம். கொஞ்சம் படிச்சுட்டுத்ததான் போங்களேன்..

ஆரம்பிக்கலாமா

அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்துல சிவகார்த்திகேயன் நடிச்சு சமீபத்தில் வெளியான படம் ‘டான்’. பள்ளி, கல்லுரி சம்பந்தப்பட்ட கதை.. அப்பா சென்டிமெண்ட் என பல விஷயங்களை பேசியிருக்கும் இப்படத்திற்கு கலவையான விமர்சனம்தான் கிடைச்சிருக்கு.. இதுல லேட்டஸ் அப்டேட் என்னன்னா... படத்தை பார்த்துட்டு தன் கண்ணீரை கட்டுப்படுத்தவே முடியலைனு, நம்ம தலைவர் அதாங்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டியிருக்கிறார். இந்த செய்திய சிவகார்த்திகேயேனே பேட்டியில உறுதியும் செஞ்சிருக்கிறார். ‘சிறப்பாக நடிச்ருக்கீங்க சிவா... கடைசி 30 நிஷம் என்னால் அழுகையைக் கட்டுப்படுத்தவே முடியலனு’ சிவகார்த்திகேயனை போனில் தொடர்புகொண்டு வாழ்த்தியிருக்கிறார் ரஜினி... சிவாக்கு இது எக்ஸ்ட்ரா இரண்டு க்ளாஸ் பூஸ்ட் குடிச்ச மாதிரி புது தெம்ப கொடுத்துருக்காம்.

அடுத்த செய்திக்கு போவோமா

அட என்னபா ட்விட்டர் ஃபுல்லா வாடிவாசல்னு இருக்கே... என்ன எங்கேயாது ஜல்லிக்கட்டு தொடங்கிட்டானு தேடிப்பார்த்தால், லெஜண்ட் சரவணன் நடிப்புல உருவாகி வரும் ‘தி லெஜண்ட்’படத்டோட பாட்டு ரீலிஸ்தான், இந்த ட்ரெண்டிங்கிற்கு காரணமாக இருக்கு. ‘தி லெஜண்ட்’படத்தின் இரண்டாவது பாடலாக‘வாடிவாசல்’ வீடியோ சாங் கலர்ஃபுல்லாக வெளியாகியிருக்கு...

ராய்லட்சுமியோட சேர்ந்து ஆடியிருக்கும் லெஜண்ட் சரவணன், உண்மையாகவே நான் டான்சிலும் லெஜண்ட்தான் என சொல்ற அளவுக்கு தன்னம்பிக்கையாக ஆடியிருக்காரு. ஆனால் என்ன மேக்கப் மட்டும்தான் கொஞ்சம் ஓவர்... ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மாஸ் காட்டியிருக்காரு.. ‘உல்லாசம்’, ‘விசில்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய இரட்டை இயக்குநர்களான ஜேடி - ஜெர்ரிதான் இந்தப் படத்தோடு டைரக்டர்.

படம் ரீலிஸ்னா தியேட்டர்ல பட்டாசு வெடிக்குறதும், பேனர் வைக்குறதுலாம் சகஜம்தான்.. ஆனால் தியேட்டர்ல பாக்குற பக்கம் எல்லாம் கட்சிக்காரங்களா இருக்காங்களே..? என்னனு யோசிக்கிறீங்களா.. அட வெளியாகியிருக்கிறது உதயநிதி ஸ்டாலினின் ‘நெஞ்சுக்கு நீதி’படம்ங்க... அனுபவ் சின்ஹா இயக்கத்துல இந்தியில் வெளியான ஆர்டிகிள் 15 படத்தின் தமிழ் ரீமேக்தான் ‘நெஞ்சுக்கு நீதி.அருண்ராஜா காமராஜ் இயக்கியிருக்கும் இந்தப் படத்துல உதயநிதி ஸ்டாலின் போலீஸ் கெட்டப்பில் நடிச்சிருக்காரு.. தன்யா ரவிச்சந்திரன், ஆரி அர்ஜுனன், சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட ஏராளமானோர் நடிச்சிருக்கிற இந்தப் படத்திற்கு பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ்தான் வெளியாகிட்ரு இருக்கு.. ஆனால் என்ன கட்சிக்காரங்க கூட்டம் கூட்டமா தியேட்டர் பக்கம்போகுறத பார்க்கும்போதுதான் கொஞ்சம் ஜெர்க் ஆகுதுனு நெட்டிசங்க சொல்றாங்க.

எப்போதும் ஏதாவது புதுசா செஞ்சிட்டு இருப்பவர்தான் இயக்குநரும், நடிகருமான பார்த்திபன். இவரோட இயக்கத்தில ‘இரவின் நிழல்’னு ஒரு படம் ரெடியாகியிருக்கிறது. இப்போது இந்தப் படத்தோட ரீலிஸ் தேதியயை அறிவிச்சிருக்காங்க... படம் ஜூன் 24-ம் தேதி தியேட்டர்ல வெளியாகப் போகுது... ஏதாவது புதுசா செஞ்சிட்டு இருப்பவர்னு பார்த்திபன்னு சொன்னோம்லா... இந்த படத்தில என்ன புதுமை இருக்குனு கேட்கிறீங்களா.. . ஒரு மணி நேரம் 34 நிமிடங்கள் 36 வினாடிகள் ஓடக்கூடிய இந்தப்படத்தை, முதன்முதலாக நான் லீனியர் முறையில் ஒரே ஷாட்டில் படமாக்கிருக்காங்களாம்.. இன்னொரு ஸ்பெஷலும் இருக்கு.. இந்தப் படத்தில மொத்தம் 3 ஆஸ்கர் வின்னர்ஸ் இணைஞ்சு பணியாற்றிருக்காங்களாம்.

என்னங்க ஓரளவுக்கு உங்க டென்ஷன் குறைஞ்சுட்டா.. டாட்டா பாய்பாய்..

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com