டூ லெட் சிறந்த திரைப்படமாக தேர்வு

டூ லெட் சிறந்த திரைப்படமாக தேர்வு

டூ லெட் சிறந்த திரைப்படமாக தேர்வு
Published on

கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய படங்கள் பிரிவில் தமிழ் திரைப்படமான டூ லெட் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

கடந்த வாரம் கொல்கத்தாவில் தொடங்கியுள்ள திரைப்பட விழாவில் பங்கேற்பதற்காக கமல்ஹாசன் கொல்கத்தா சென்றிருந்தார். இந்த விழாவில் பாலிவுட் நடிகர் அமிதாப், ஷாருக்கான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு திரும்பினர். இவ்விழாவில் ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கியுள்ள டூ லெட் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. 
இப்படம் 30 நாட்களில் வாடகைக்கு புது வீடு தேட வேண்டிய கட்டாயத்தில் உள்ள குடும்பத்தின் சூழ்நிலையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. கொல்கத்தா திரைப்பட விழாவில் கலந்து கொண்ட 10 இந்திய திரைப்படங்களில் டூ லெட் சிறந்த படமாக தேர்வாகியுள்ளது. பரதேசி, தாரை தப்பட்டை போன்ற திரைப்படங்களில் செழியன் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com