‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி

‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி
‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி

‘பிகில்’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘பிகில்’ திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. ஆனால் படத்தின் சிறப்புக் காட்சிக்கு அரசு அனுமதி அளிக்காமல் இருந்தது. இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டிருந்த அமைச்சர் கடம்பூர் ராஜூ, “சிறப்புக் காட்சிகளை ரத்து செய்யக் கூறி அறிக்கை அனுப்பப்பட்டுவிட்டது. மேலும் முன்பதிவு செய்தவர்களுக்கு பணத்தை திருப்பி வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிக கட்டணம் வசூலிப்பது கட்டுப்படுத்தப்படும்” எனவும் பதிவிட்டிருந்தார். 

இதைத்தொடர்ந்து, தமிழக அரசின் நிபந்தனைகளுக்கு உட்பட்டால் ‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளிக்கப்படும் எனத் தகவல் வெளியாகியது. இந்நிலையில் ‘பிகில்’ படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் காரணமாக, நாளை அதிகாலை திரையரங்குகளில் ‘பிகில்’ படத்தின் சிறப்புக் காட்சிகள் ஒளிபரப்பப்படும்.

சிறப்புக் காட்சிகளுக்கு அரசின் நிபந்தனைகளை தயாரிப்பு நிறுவனம் ஏற்றுக்கொண்டதால் அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக செய்தி ஒளிபரப்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். அதேசமயம் சிறப்புக் காட்சிகளுக்கு அரசு விதித்த கட்டணத்தையே வாங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் தமிழக அரசுக்கு ஏஜிஎஸ் நிறுவனம் நன்றியை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com