\
சிவாஜி மணிமண்டபம்: நடிகர் சங்கம் திடீர் கோரிக்கை

சிவாஜி மணிமண்டபம்: நடிகர் சங்கம் திடீர் கோரிக்கை

சிவாஜி மணிமண்டபம்: நடிகர் சங்கம் திடீர் கோரிக்கை
Published on

சிவாஜி மணிமண்டபம் திறப்பு விழாவில் முதல்வர் கலந்து கொள்ள வேண்டும் என்று நடிகர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

இது தொடர்பாக நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’சிவாஜிகணேசன், தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றியமைத்தவர். கலைக்காக அவர் பணியை அடையாளங்கண்டு பிரஞ்சு அரசாங்கம் ’செவாலியே’ விருது அளித்து கௌரவித்தது. உலகம் போற்றும் அக்கலைஞனின் மணிமண்டபம் மக்களுக்கு அர்ப்பணிக்கப்படும் போது, சிறப்பான விழாவாக அமைய வேண்டுமென்பது தமிழகத்தின் கனவு. 
அந்தக் கனவை, முழுமையாக நனவாக்க வேண்டும் என்றால், அதை, முதலமைச்சரே திறந்து வைக்க வேண்டும். அதுவே அக்கலைச் சிகரத்திற்கு சரியான, தகுதியான மரியாதையாகும். இதுவே ஒட்டுமொத்த நடிகர் சமூகத்தின் உணர்வும், குரலும், எதிர்பார்ப்பும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com